skip to main |
skip to sidebar
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
தினேஷ்மாயா....
அந்நியரை நம்பியிராதே
Thursday, February 28, 2013
Posted by
தினேஷ்மாயா
@
2/28/2013 02:47:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கவிதை
Posted by
தினேஷ்மாயா
@
2/28/2013 02:44:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

“அன்னைதந்த
பால் ஒழுகும் குழந்தைவாய் தேன்
ஒழுக அம்மா என்று
சொன்னதுவும்
தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்த தான
பொன்மொழியும்
தமிழன்றோ! புதிதுபுதி தாய்க்கண்ட பொருளி னோடு
மின்னியதும்
தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் தமிழே யன்றோ!
வானத்து
வெண்ணிலவும் வையத்தின் ஓவியமும் தரும் வியப்பைத்
தேனொக்கப்
பொழிந்ததுவும் தமிழன்றோ! தெருவிலுறு மக்கள் தந்த
ஊனுக்குள்
உணர்வேயும் தமிழன்றோ! வெளியேயும் உள்ளத் துள்ளும்
தான்நத்தும்
அனைத்துமே காட்சிதரும் வாயிலெலாம் தமிழேயன்றோ!
திருமிக்க
தமிழகத்தின் குடும்பத்தீர்! இல்லறத்தீர்! செந்த மிழ்க்கே
வருமிக்க
தீமையினை எதிர்த்திடுவீர் நெஞ்சாலும் வாய்மெய் யாலும்!
பொருள்மிக்க
தமிழ்மொழிக்குப் புரிந்திடுவீர் நற்றொண்டு; புரியீ ராயின்,
இருள்மிக்க
தாகிவிடும் தமிழ்நாடும் தமிழர்களின் இனிய வாழ்வும்!
காக்கை
'கா' என்றுதனைக் காப்பாற்றச் சொல்லும்!ஒரு கருமு கில்தான்,
நோக்கியே
'கடமடா' என்றேதன் கடனுரைக்கும்! நுண்கண் கிள்ளை
வாய்க்கும்வகை
'அக்கா' என் றழைத்ததனால் வஞ்சத்துப்
பூனை 'ஞாம் ஞாம்'
காக்கின்றோம்
எனச்சொல்லக் கழுதைஅதை 'ஏ' என்று கடிந்து
கூறும்.
'கூ' எனவே வையத்தின் பேருரைத்துக்
குயில் கூவும். 'வாழ் வாழ்' என்று
நாவினிக்க
நாய்வாழ்த்தும். நற்சேவல் 'கோ' என்று வேந்தன்
பேரைப்
பாவிசைத்தாற்
போலிசைக்க, வரும்காற்றோ 'ஆம்' என்று பழிச்சும்!
இங்கு
யாவினுமே
தமிழல்லால் இயற்கைதரும் மொழிவேறொன் றில்லை யன்றோ? ”
- பாவேந்தர் பாரதிதாசன்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
2/28/2013 02:26:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்பென்று கொட்டு முரசே
Posted by
தினேஷ்மாயா
@
2/28/2013 02:15:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அக்கினிக் குஞ்சு
Posted by
தினேஷ்மாயா
@
2/28/2013 02:11:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நரகம்
Wednesday, February 27, 2013
Posted by
தினேஷ்மாயா
@
2/27/2013 02:21:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வியர்வை சிந்து
Monday, February 25, 2013
Posted by
தினேஷ்மாயா
@
2/25/2013 02:04:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தோல்வி
Posted by
தினேஷ்மாயா
@
2/25/2013 01:58:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்பில்லா அழகு
Posted by
தினேஷ்மாயா
@
2/25/2013 01:53:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

குப்பைத்தொட்டி
Posted by
தினேஷ்மாயா
@
2/25/2013 01:50:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வருவதை எதிர்கொள்வோம்
Posted by
தினேஷ்மாயா
@
2/25/2013 01:39:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மனிதன் பேசுகிறேன்
Sunday, February 24, 2013
இயந்திர வாழ்க்கை வாழும் அனைத்து இயந்திரங்களுக்கும் வணக்கம்.
நான் மனிதன் பேசுகிறேன்.
எதற்கு ஓடுகிறோம், எங்கே ஓடுகிறோம் என்று தெரியாமலேயே வாழ்க்கையை வாழாமல் அதை ஒரு ஓட்டப்பந்தயமாக கருதி ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டப்பந்தய வீரர்கள் ஆகிவிட்டனர் நீவிர்.
பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்தால் விலைகொடுத்து வாங்க முடியாத விஷயங்கள் உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது.
உங்கள் அனைவர்க்கும் ஒரு உண்மை சொல்லட்டுமா. பணத்தை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது. உழைத்துதான் வாங்க முடியும். அப்படிப்பட்ட பணத்தையே பணத்தால் வாங்கிட முடியாத போது, எதை நீங்கள் பணத்தை வைத்து வாங்கிவிடப்போகிறீர்கள்.
உயிர்வாழப்போவது எத்தனை வருடம், எத்தனை மாதம், எத்தனை நாள், எத்தனை மணி நேரம், எத்தனை நொடி என்று எவர்க்கும் தெரியாது. எல்லோர்க்கும் ஒருநாள் இந்த ஓட்டம் நிச்சயம் நிற்கத்தான் போகிறது. அதற்கு முன்னர், ஓட்டத்தை நிறுத்திவிட்டு கொஞ்சம் நில்லுங்கள். கண்களை மூடி ஆழமாய் சுவாசியுங்கள். புல்தரையில் கைகள் கால்களை பரப்பி வானம் நோக்கி படுங்கள். மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.
இயற்கையின் ஆச்சர்யமூட்டும் வண்ணங்களையும், அதிசயமூட்டும் சப்தங்களையும் ரசியுங்கள்.
காலார நடைப்பழகுங்கள். பக்கத்து வீட்டுக்கு சென்றால் கூட உந்துவண்டியை எடுக்காமல் குறைந்தது 2 கி.மீ. தூரம் வரையிலான இடத்திற்கு நடந்து செல்லுங்கள். உலகத்தை கொஞ்சம் பாருங்கள். உங்கள் நடைப்பயணத்தில் பல அனுபவங்கள் உங்கள் கூட வரும். வெயில் என்று பார்க்கிறீர்களா. வெயில் நம் உடம்பிற்கு மிகவும் அவசியம். வெயிலில் நடந்தால் மட்டுமே வியர்வை வருமே தவிர, குளிர்சாதன அறையில் இருந்தாலோ, காரில் பயணம் செய்தாலோ, வியர்வை வராது. நம் உடம்பில் தேவையில்லாத நீரை வியர்வைதான் வெளியேற்றும் என்பது ஆறாம் வகுப்பில் படித்திருக்கிறோம்.
உதவி செய்யுங்கள். அனைவர்க்கும் உதவி செய்யுங்கள். எதிரியோ நண்பனோ, தெரிந்தவனோ தெரியாதவனோ அனைவரையும் ஒன்றாக பாருங்கள். நாம் வாழும் இந்த உலகத்திற்கு நாம் கட்டாயம் செய்யவேண்டியது என்னவென்றால், அதில் வாழும் சக தோழர்களுக்கு உதவிசெய்து வாழ்வதே.
இசை கேளுங்கள். மனதில் இருக்கும் பாரம் அனைத்தையும் இறக்கிவைத்து இசையில் ஒன்றற கலந்திடுங்கள்.
பசித்தால் மட்டுமே உண்ணுங்கள். சாப்பிடவேண்டுமே என்ற கட்டாயத்திற்காக எதையும் சாப்பிடாதீர்கள். வயிறு ஒன்றும் குப்பைத்தொட்டி இல்லை உங்களுக்கு பிடிக்காத பொருளை அங்கே கொட்ட.
மனதிற்கு பிடித்தால் எதைவேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால் அதே சமயம், திண்ண உணவை செறிக்கவைக்க கொஞ்சமாவது உழையுங்கள்.
சின்ன சின்ன விஷயங்களை இரசியுங்கள். எதற்கும் தயங்காதீர்கள். எவர்க்கும் அஞ்சாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை.
இறைவனை நம்பாவிட்டாலும் இயற்கையை நம்புங்கள். பஞ்ச பூதங்களை இயன்றவரை மாசுப்படாமல் காத்திருங்கள்.
சொர்க்கமோ நரகமோ அதை இங்கேயே அனுபவியுங்கள். அது உங்கள் கையில்தான் இருக்கிறது. இந்த உலகம் மட்டுமே உண்மை. இங்கேயே எல்லாவற்றையும் அனுபவியுங்கள்.
காதல் செய்யுங்கள். பிடித்த நபர் மட்டுமல்ல. உங்களுக்கு எது பிடித்தாலும் அதனை நேசியுங்கள். காதலை பரப்புங்கள். அமைதி தானாக பரவும்.
கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் கோபம் கொண்டால், அது உங்களை கொல்லும்.
புன்னைகைக்க பழகிக்கொள்ளுங்கள். பொன் நகையைவிட புன்னகையே சிறந்த ஆபரணம்.
மழையில் நனையுங்கள். மழையை ரசியுங்கள்.
திருமணம் செய்துக்கொள்ளுங்கள்
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்றிருங்கள். அளவோடு உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள். அளவான குழந்தை செல்வத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் உடம்பில் தெம்பு இருக்கும்வரை உங்கள் தேவைகளையும் உங்கள் வேலைகளையும் நீங்களே செய்துவாருங்கள்.
ஓடி விளையாடுங்கள். உடலுக்கு வேலைகொடுங்கள்.
நன்றாக தூங்குங்கள். தூக்கம் மட்டுமே உங்களுக்கு மனதிற்கு சக்தியையும் உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.
சோம்பி திரியாதீர்கள்.
தேவைக்கேற்ப செலவு செய்யுங்கள். சேமித்து வையுங்கள்.
அடுத்த தலைமுறையினருக்கு இயற்கைவளத்தை கொஞ்சமாவது விட்டுவையுங்கள்.
எல்லா உறவுகளிலும் உண்மையாய் இருங்கள்.
நல்ல விஷங்களை பிறர்க்கு சொல்லிக்கொடுங்கள். பலர்க்கு முன்னோடியாய் இருங்கள்.
வாழ்க்கையை ஒரு போட்டியாக பாவித்து, எப்போதும் வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிராதீர்கள்.
வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள். மனிதனாய் இருக்க முயலுங்கள்.
- தினேஷ்மாயா -
Posted by
தினேஷ்மாயா
@
2/24/2013 06:34:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கடிகாரம் காரித்துப்பும்..
Posted by
தினேஷ்மாயா
@
2/24/2013 06:01:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இணையதள கொலைக்காரன்
இணையதளம் இன்று உலகத்தை உங்கள் உள்ளங்கையில் எடுத்துவந்து கொடுக்கிறது. இதற்கு ஈடு இணை ஏதுமில்லாவண்ணம் அதீத வளர்ச்சி அடைந்து நிற்கிறது இந்த இணையதளம் இன்று. பெரும்பாலான மக்கள் தங்கள் தேவைகள் அனைத்திற்கும் இணையதளத்தையே நம்பி இருக்கும் நிலையும் வந்தாகிவிட்டது.
இணையதளம் பெரும்பாலும் நம் நேரத்தை விரயமாக்குவதோடு, நம் வேலைகள் பலவற்றையும் பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். வழக்கம்போல் நானும் இன்று இணையதளத்தில் ஆழ்ந்திருந்தேன். வழக்கம்போல் மின்சாரமும் தடைப்பட்டுவிட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பலநாட்களாய் தேங்கி கிடந்த துணிகளை துவைத்தேன். என் அறையை சுத்தம் செய்தேன். துணிகளை அலமாரியில் மடித்து வைத்தேன், புத்தகங்களையும் அடுக்கி வைத்தேன், அறையை கொஞ்சம் அலங்காரம் செய்தேன். இன்னும் சில உபயோகமான வேலைகளையும் செய்து முடித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன். இந்த இணையதளம் என் வேலைகளை செய்யவிடாமல் என் நேரத்தை கொலை செய்துக்கொண்டிருக்கிறது என்று.
வகுப்பறையில் நாம் சில பாடங்களை கற்போம். அதுபோல இணையதளமும் ஒரு வகுப்பறை தான். நமக்கு தேவையாவ விஷயங்களை இங்கே கற்றறியலாம். ஆனால், வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் அனைத்தும் வகுப்பறையில் மட்டுமே கிடைத்துவிடாது. வெளியே வந்து உலகத்தை பரந்த கண்ணோட்டத்தோடு பாருங்கள். வாழ்க்கை அங்கே விரிந்து கிடக்கிறது. அதனை அனுபவித்து வாழுங்கள். இணையதளத்தை ஊறுகாய் போல எடுத்துக்கொண்டு, உலக அனுபவத்தை உணவாக்கிக்கொண்டு வாழப்பழகிவிட்டால், எல்லாம் சுகம் தான்.
இணையதளத்திற்கு அடிமையாகி பலர் அவதிப்படுகின்றனர். அது ஒரு மனநோய் என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கின்றனர். அதிகநேரம் இணையதளத்தில் இருப்பதை தவிர்க்கவும். தேவைக்கேற்ப எதையும் அளவோடு பயன்படுத்தினால் அது நமக்கும் சரி, மற்றவர்க்கும் சரி எப்போதும் நன்மையை மட்டுமே தரும். சிந்தித்து செயல்படுவோம்.
- தினேஷ்மாயா -
Posted by
தினேஷ்மாயா
@
2/24/2013 05:56:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சிற்பி
Posted by
தினேஷ்மாயா
@
2/24/2013 12:30:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காதல் என்றொரு மிருகம்
Friday, February 22, 2013
Posted by
தினேஷ்மாயா
@
2/22/2013 01:39:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மாயா
Monday, February 18, 2013
Posted by
தினேஷ்மாயா
@
2/18/2013 01:41:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தமிழ்
Friday, February 15, 2013
Posted by
தினேஷ்மாயா
@
2/15/2013 09:18:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உதவி செய்.
Posted by
தினேஷ்மாயா
@
2/15/2013 09:15:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இயற்கை சீற்றம்
Wednesday, February 13, 2013
Posted by
தினேஷ்மாயா
@
2/13/2013 11:18:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வல்லமை தாராயோ
Posted by
தினேஷ்மாயா
@
2/13/2013 11:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்பு வாழ்த்துக்கள்
Posted by
தினேஷ்மாயா
@
2/13/2013 10:25:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காதல்
Posted by
தினேஷ்மாயா
@
2/13/2013 10:23:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வீரத்தமிழன்
Tuesday, February 12, 2013
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 10:02:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சித்திரமும்
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:57:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இன்றைய உலகம்
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:53:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

விலைமாதர்
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:51:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வயலின் வாசிக்க ஆசை
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:48:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காதல் மாத்திரை
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:43:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

முகம் அறியா முகங்கள்
முகம் அறியா முகவரி அறியா பல உள்ளங்களை எனக்கு நண்பர்களாய் கொடுத்திருக்கிறது என் வலைப்பக்கம். ஒருவனின் எழுத்துக்களையும் அவனது உணர்வுகளையும் மதித்து என்னை தொடர்புக்கொண்டு பாராட்டி நட்பு பாராட்டி வரும் அனைத்து உள்ளங்களுக்கான தனித்துவமான பதிவு இது. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..
- தினேஷ்மாயா -
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:42:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நம்பிக்கை
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:34:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சூரியனும் சந்திரனும்
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:31:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அழுகையும் அழகே
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:27:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

புள்ளிக்கோலம்
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தனிமையில் தனிமை
பலரும் தனிமையை விரும்புவார்கள். ஆனால் தனிமை என்று சொல்லிவிட்டு, தனித்திருக்கும்போது பாட்டு கேட்பார்கள், படம் பார்ப்பார்கள், விளையாடுவார்கள், நூல் படிப்பார்கள், தூங்குவார்கள் இல்லை வேறு எதாச்சும் செய்வார்கள். ஆனால் நான் தனிமையிலும் தனிமையை மட்டுமே விரும்புவேன். தனிமையை நான் விரும்புகிறேன் என்றால் அப்போது எனக்கு எதுவும் வேண்டாம் என்று விட்டுவிடுவேன். தொல்லைப்பேசியில் இருந்து அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிடுவேன். பெரும்பாலும் தனிமையில் மனதிற்குள் பாட்டு பாடிக்கொண்டிருப்பேன். மற்றபடியான செயல்களை பெரிதும் தவிர்த்துவிட்டு தனிமையில் உண்மையான தனிமையை அனுபவித்து வாழ்ந்துக்கொண்டிருப்பேன்.
- தினேஷ்மாயா -
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:20:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மிட்டாய்
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:05:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

துள்ளி விளையாடு
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 09:04:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என் சோகம்
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 08:52:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஜீவசமாதி
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1. திருமூலர்
- சிதம்பரம்.
2. போகர்
- பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர்
– கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி
- பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர்
- திருப்பதி, திருமலை
6. மச்சமுனி
- திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப
சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி
சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர்
– திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர்
- தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர்
– பேரூர்.
12. பாம்பாட்டி
சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர்
- கும்பகோணம்.
14. உரோமரிசி
- திருக்கயிலை
15. காகபுசுண்டர்
- திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச்
சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச்
சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி
சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர்
- பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம்
நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண
சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர்
- திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ
சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர்
- கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர்
- நண்ணாசேர்.
26. காசிபர்
- ருத்ரகிரி
27. வரதர்
- தென்மலை
28. கன்னிச்
சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி
– வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி
சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி
சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர்
- காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர்
- திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல
முனி - ஆரூர்
35. சந்திரானந்தர்
- திருவாஞ்சியம்.
36. சுந்தரர்
- வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி
நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி
- எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய்
சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார்
- திருவொற்றியூர்.
41. வள்ளலார்
- வடலூர்.
42. சென்னிமலை
சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர்,
சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர்
- மந்திராலயம்.
46. ரமண
மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர்
- காசி.
48. நடன
கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த
சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி
சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார்
பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன்
கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர்
- ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச
யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர்
- பூரி.
55. ஜட்ஜ்
சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி
பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப
நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச
அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு
பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி
சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய
ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
- மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த
சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து
வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர்
- நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர்
- திருவண்ணாமலை.
66. பாடக்சேரி
தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்
திருக்கோவில்.
67. மௌன
சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை
நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர்
சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு
மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய
சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான
பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர்
- நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க
சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர்
சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான
பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த
சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல்
பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார்
பேட்டை.
79. ஸ்ரீராம்
பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா
சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான்
படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி
ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர
பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த
சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல்
சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன்
குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த
நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை
பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த
சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி
சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு
குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த
சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள்
தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண
சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி
சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில்
எதிரில்.
92. சுப்பிரமணிய
அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள
எல்லப் பிள்ளை.
93. யோகி
ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர்
சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன்
மகன் சமாதி - கிரிவலம் வந்த
நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண
சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர
சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர
ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக
நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான்
சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம்
ஆகியுள்ளார்.
101. மெய்வரத்
தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில்
உள்ளது.
102. குகை
நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி
- சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன்
சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி
சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார்
சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா
ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார்
ஜீவசமாதி - காஞ்சிபுரம்
சில மாதங்களாக கடவுள் மீது இருக்கும் ஈர்ப்பைவிட சித்தர்கள்மீது இருக்கும் ஈர்ப்பு அதிகமாய் இருக்கிறது. கடவுள் கூட பணம், செல்வாக்கு இருந்தால் மட்டுமே மிக அருகில் தரிசனம் தருகிறான். இறைவன் என்னும் கருத்தை என் மனதில் இருந்து திருத்திக்கொண்டேன். ஆலயம் சென்று வழிப்பட்டால் மட்டுமே இறைவனை வணங்கியதுபோல் ஆகாது. மனதளவில் அவனை வழிப்பட்டால் அதுவே சிறந்தது. சித்தர்கள் தங்களையும் இயற்கையையும் உணர்ந்து அதன் நியதிப்படி வாழ்ந்து இறைவனை கண்டவர்கள். இறைவன் என்றால் இறையுணர்வை பெற்றவர்கள். அவர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களுக்கு சென்று தியானம் செய்தால் அவ்விடத்தில் இருக்கும் அதிர்வுகள் நம்மை நன்னெறிப்படுத்தும். திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை, கும்பக்கோணம், பழனி, இடைக்காட்டூர், அழகர் கோவில், நாகப்பட்டினம், அழகர்மலை போன்ற இடங்களுக்கும் இன்னும் சில ஜீவசமாதி இடங்களுக்கும் சென்றுள்ளேன். கோவில்களுக்கு செல்வதைவிட மகான்கள் ஜீவசமாதி அடைந்த இடத்திற்கு சென்று பாருங்கள். உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.
- தினேஷ்மாயா -
Posted by
தினேஷ்மாயா
@
2/12/2013 08:37:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2013
(787)
-
▼
February
(81)
- அந்நியரை நம்பியிராதே
- கவிதை
- எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
- அன்பென்று கொட்டு முரசே
- அக்கினிக் குஞ்சு
- நரகம்
- வியர்வை சிந்து
- தோல்வி
- அன்பில்லா அழகு
- குப்பைத்தொட்டி
- வருவதை எதிர்கொள்வோம்
- மனிதன் பேசுகிறேன்
- கடிகாரம் காரித்துப்பும்..
- இணையதள கொலைக்காரன்
- சிற்பி
- காதல் என்றொரு மிருகம்
- மாயா
- தமிழ்
- உதவி செய்.
- இயற்கை சீற்றம்
- வல்லமை தாராயோ
- அன்பு வாழ்த்துக்கள்
- காதல்
- வீரத்தமிழன்
- சித்திரமும்
- இன்றைய உலகம்
- விலைமாதர்
- வயலின் வாசிக்க ஆசை
- காதல் மாத்திரை
- முகம் அறியா முகங்கள்
- நம்பிக்கை
- சூரியனும் சந்திரனும்
- அழுகையும் அழகே
- புள்ளிக்கோலம்
- தனிமையில் தனிமை
- மிட்டாய்
- துள்ளி விளையாடு
- என் சோகம்
- ஜீவசமாதி
- கலைஞானி
- நாத வினோதங்கள்
- பூச்சாண்டி
- குடி குடியை கெடுக்காது
- துணிவு
- கனவு உலகம்
- காதலர் தினம் !
- தண்ணீரில்லா தேசம்
- கடவுள் இருக்கிறானா ?
- ஞா-நீ
- சுதந்திரம்
- காதல் அனுபவம்
- சுயசரிதை
- தேவை
- நவம்பர்
- ஆயிரம் முத்தம்
- 247 எழுத்துக்கள்
- தலையணை
- இதுவே ஜனநாயகம்
- அன்பென்னும் வலி
- என் இனிய இயந்திரா
- உணர்வு களஞ்சியம்
- Law of Closure
- போர் - பசி
- பாரதி - அஞ்சல்தலை
- Green Tea
- பனிக்குகை
- இயேசு
- அன்பு மதம்
- செய்வன திருந்தச்செய்
- நடைபிணம்
- அடடா !
- அல்லாஹ் ஒருவனே !!
- ஜிஹாத்
- யோகா - தொழுகை
- நாளைய பிணங்கள்
- உயிரிழப்பு
- வாழ்க மனிதநேயம்
- Praise The Lord !!
- குடிக்கலாமா !!
- ஆசை வந்து என்னை
- ஞாபகம் வருதே
-
▼
February
(81)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !