கால காலமாக வாழும்

Sunday, December 08, 2013



கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன் கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம்
யாரடா நான் நீயடா ஹேய் பகைவனே போ
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்

வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை
ஒரு வட்டம் இல்லை
தடை யாரும் இல்லை
எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை
ஒரு கேள்வி இல்லை
மலர் மாலை நாளை
முள்ளை  யார் அள்ளி போட்டாலும்
முல்லை பூவாக மாறாதோ
முள்ளை  யார் அள்ளி போட்டாலும்
முல்லை பூவாக மாறாதோ
ஆஹா பூவுக்கு யார் இங்கே தீ வைப்பது
பகையே பகையே விலகு விலகு ஓடு

கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன் கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்

மோதி பார்க்காதே என்னை கண்டு
நீ வாழை தண்டு
இவன் யானை கன்று
நாளும் போராடும் வீரம் உண்டு
சுய மானம் உண்டு
பகை வெல்வோம் இன்று
பாதை இல்லாமல் போனாலும்
காதல் தேரோட்டம் நில்லாது
பாதை இல்லாமல் போனாலும்
காதல் தேரோட்டம் நில்லாது
பந்தம் நம் பந்தம் என்றென்றும் தீ பந்தமே
இணைவோம் இணைவோம் பகையை சுடுவோம் நாமே

கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன் கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம்
யாரடா நான் நீயடா ஹேய் பகைவனே போ
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன் கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்

திரைப்படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியசித்ரா 

0 Comments: