மணியே மணிக்குயிலே

Sunday, December 08, 2013



மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்

பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ…ஓ !

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடி இடையின் நடை அழகே

பொன்னில் வடித்த சிலையே
பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே..
என்ன இனிக்கும் நிலையே
இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
கன்னிமயில் தூண்டிலிட்டு..
காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழயே
பெண்ணிவளை ஆதரித்து
பேசி தொட்டு காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலயே
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்
கொடி இடையில் பாசம் வைத்தேன்

பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ.. ஓ !

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…

கண்ணிமைகளை வருத்தி
கனவுகளை துரத்தி
என் மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி
கண்டபடியெனை துரத்தி
அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி..
கோடி மணி ஓசை நெஞ்சில்
கூடி வந்து தான் ஒலிக்க
ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள்…
சூட மலர் மாலை கொண்டு
தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடைவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்…
அந்தி வரும் நேரமம்மா ஆசை விளக்கேற்றுதம்மா…

பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ ஓ !

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்

பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி…
ஓ…ஹோ ஓ !

திரைப்படம் : நாடோடி தென்றல்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ

* தினேஷ்மாயா *

0 Comments: