என்றென்றும் புன்னகை

Thursday, December 26, 2013




    நேற்று என்றென்றும் புன்னகை படத்திற்கு சென்றிருந்தேன். படம் பார்த்தேயாக வேண்டும் என்று வலுகட்டாயமாக என் நண்பர்களையும் அழைத்து சென்றேன்.

          படத்தைப்பற்றி நான் விமர்சிக்க மாட்டேன், அது இப்போது தேவையும் இல்லை. படத்தில் என்னை கவர்ந்த விஷயங்களை இங்கே பகிர்துக்கொள்ளப்போகிறேன்.

           படத்தில் கதை பெரிதாக இல்லையென்றாலும், திரைக்கதை கதைக்கு வலு சேர்க்கிறது. நட்பை மிகவும் அழகாக சித்தரித்திருக்கிறார்கள். காதல்மீதும் பெண்கள்மீதும் ஜீவாவுக்கு இருக்கும் வெறுப்பு பெரும்பாலான படங்களில் பார்த்தாச்சு அதனால் அதில் புதுமை எதுவும் தெரியவில்லை. ஆனாலும், ஜீவாவுக்கும் த்ரிஷாவுக்குமான காதலை மிக அழகாக செதுக்கியிருக்கிறார்கள். அப்புறம், நான் இதை சொல்லியே ஆகனும். த்ரிஷா அவ்ளோ அழகு. வழக்கமாக த்ரிஷா என்னை அதிகம் கவர்ந்ததில்லை இதுவரை. ஆனால் இப்படத்தில் த்ரிஷாவை ரொம்ப அழகாக தெரிகிறார், அழகாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முகத்தில் பொலிவும், நடிப்பில் முதிர்வும் தெரிகிறது. 

           பாடல்கள் அனைத்தும் ரசிக்கவைக்கிறது. சந்தானம் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். பொதுவாகவரும் பல நகைச்சுவைக் காட்சிகள் கைத்தட்டல்களை அள்ளி செல்கிறது. பிண்ணனி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் எப்போது முடியும் என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு வராமல் பார்த்துக்கொண்டார் இயக்குனர்.

       “பொண்ணுங்க பாதியிலேயே போய்டுவாங்க” - இந்த வசனம் ஏனோ தெரியலை என்னை கொஞ்சம் உள்வரை தாக்கியது. 

          மொத்தத்தில் திரைப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நீங்களும் நேரம் கிடைத்தால் பாருங்கள். 

   உணர்வுகளையும் உறவுகளின் அவசியத்தையும் நன்று பதிவு செய்திருக்கிறார்கள்.

   வாழ்த்துக்கள் !!

* தினேஷ்மாயா *

0 Comments: