உலகம் அழியுமா ?

Tuesday, December 25, 2012




       உலகம் அழியுமா என்ற கேள்வி பலரின் மனதிலும் பரவலாக வந்து செல்கிறது சில நாட்களாக. அவர்களைப்போன்றோருக்கு என் தரப்பு வாதத்தை முன்வைக்க விரும்புகிறேன். இந்த வெட்கங்கெட்ட மனிதனை பொறுத்தவரை உலகம் என்பது 700 கோடி மனிதனை கொண்டது மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். ஆனால், இந்த மனிதனே வெறும் 4 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியவன். ஆனால் இந்த பூமியோ 450 கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியது. இயற்கையை பொறுத்தவரை மனிதன் என்பவனும் ஒருவகை விலங்கினம். அவ்வளவுதான். அவனைத்தவிர இந்த உலகில் ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன. அதையும்விட பஞ்சபூதங்களால் ஆனவை இந்த உலகம். 

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இந்த ஐந்தும் அழிந்தால் வேண்டுமானால் உலகம் அழியும் என்று சொல்வேன் நான். சுமார் 10 கோடி வருடங்களுக்கு முன்னர், இப்போது இந்த உலகத்தில் மனிதர்கள் எத்தனைபேர் இருக்கிறோமோ அதைவிட பல்லாயிரம்  மடங்கு அதிகமாக இருந்த டைனோசர்கள் வாழ்ந்துவந்தன. இந்த உலகம் முழுதும் பரவியிருந்த அந்த உயிரினங்கள் இப்போது எங்கே ?

         அத்தனை உயிரினங்கள் அழிந்தபின்னும் இந்த உலகம் இன்னமும் அழியாமல் இந்த மனிதன் போன்ற விலங்கினங்களுக்கு வாழ்விடம் அளித்துவருகிறது. உலகம் ஒருபோதும் அழியாது. உலகத்தில் வாழும் உயிரினங்கள் வேண்டுமானால் அழியுமே தவிர உலகம் என்றுமே அழியாது. அப்படி இந்த உலகத்திற்கு அழிவு வருமானால் அது இந்த மனிதனால் மட்டுமே வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: