நீதானே என் பொன்வசந்தம்

Sunday, December 23, 2012




 * நீதானே என் பொன்வசந்தம் *

   கௌதம் வாசுதேவ் மேனனின் இன்னொரு காதல் காவியம். வழக்கமாக காதக் கதையை அவர் பாணியில் கொடுத்திருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா போல இல்லை என்று சொல்பவர்கள் கவனத்திற்கு, எந்த திரைப்படத்தையும் ஒரு இயக்குனர் தான் ஏற்கெனவே எடுத்த திரைப்படம் போல் இருக்ககூடாது என்றுதான் நினைப்பார். அது புரியாமல் அதைப்போல் இது இல்லை என்று பேசினால் எப்படி. 

    எனக்கு இந்த திரைப்படம் ரொம்பவே பிடிச்சிருக்கு. This could be your love story-னு போஸ்டரில் போட்டிருந்துச்சு. அதனாலேயே, பலர் கல்லூரியை கட் அடிச்சிட்டுத்தான் படம் பார்க்க போவாங்க, ஆனால் நான் அலுவலகத்தை கட் அடிச்சிட்டு படம் பார்க்க சென்றேன். Yes Of Course. This seems to be my love story-னு மனசு பதில் சொல்லிச்சு.

   பாடல்கள் அனைத்து மிக அருமை. படம் பார்க்கும் வரை ஒரு பாடலைக்கூட கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்போது இதை எழுதும்போது கூட இந்த திரைப்படத்தின் பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. படம் பார்க்கும்போது பத்து நிமிடத்திற்கு ஒரு பாடல் வருவதைப்போல் உணர்ந்தேன். இப்படத்தின் பாடல்களின் மொத்த நேரம் 42 நிமிடங்கள். இப்போதுதான் அதிகமுறை இந்த படத்தின் பாடல்களை கேட்டுவருகிறேன். எந்த பாடல் அதிகம் பிடிக்கிறது என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன். இருப்பினும் என் வலையில் இந்த பதிவிற்கு முன்னர் எழுதிய நான்கு பாடல்கள் என் மனதை அதிகம் கவர்ந்தது. 
  
   வழக்கமாக கௌதம் மேனனின் படங்கள் என்றால் பாடலாசிரியை தாமரை தான் பாடல்கள் அனைத்தையும் எழுதுவார். இம்முறை நா.முத்துகுமாரின் வரிகளில் நம்மை கைது செய்கிறார். இளையராஜாவின் இசையோடு நம்மை இசையால் தண்டிக்கிறார் இயக்குனர். ஆனால் இந்த இசை தண்டனை ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.

 “ காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன் ” பாடலின் வரிகள் அனைத்து கவித கவித என்று சொல்லும்படி அவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த பாடலை கேட்டிராத உங்கள் பெண் தோழியிடம் இந்த வரிகளை எழுதி கொடுங்கள் அப்படியே உங்களுக்காக அவர் உருகுவார்.

“ முதல்முறை பார்த்த நியாபகம் ” பாடலும் புதுரகம். அதிகம் ரசிக்க வைத்தது.

“ வானம் மெல்ல கீழிறங்கி ” பாடல் இசைஞானியின் குரலுக்காகவே எத்தனைமுறை வேண்டுமானாலும் கேட்கலாம். வரிகளும் அருமை. திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.

“ என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் ” பாடலும் கவிதைரகம். 

மற்ற பாடல்களும் குறைச்சல் இல்லை. அனைத்து பாடல்களையும் ஒன்றாகவே இரசிக்கிறேன். 

பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலும் சரி, கல்லூரி பருவத்தில் நடக்கும் காதலும் சரி, இன்றைய இளைஞர்களின் காதலை நம் கண்முன் கொண்டுவர இயக்குனர் கொஞ்சம் அதிகமாவே மெனக்கெட்டிருக்கிறார்.

போஸ்டரில் ஜீவாவின் பெயரை ரகு என்று சமந்தாவின் பெயரை நித்யா என்று விளம்பரப்படுத்திவிட்டு படத்தில் ஜீவாவின் பெயரை வருன் என்று மாற்றியிருக்கின்றனர். இது யார் கவனிக்காமல் செய்த தவறு என்று தெரியவில்லை.

படத்தின் ஆரம்பத்திலேயே வருன் - நித்யா இவர்களின் காதல் கதையில் இருந்து கொஞ்சம் பக்கங்கள் என்றுதானே சொல்லி இயக்குனர் கதையை தொடங்குகிறார். பின் ஏன் படத்தில் எதிர்பார்த்தவிதம் எதுவும் இல்லை என்கிறார்கள் இரசிகர்கள் என்றுதான் புரியவில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். நிச்சயம் இப்படம் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


**** * நீதானே என் பொன்வசந்தம் *****
- அன்புடன்

****தினேஷ்மாயா****

2 Comments:

Unknown said...

enakki romba romba pdichchirukku intha movie.

love la naanum same nithya charcter thaan.

தினேஷ்மாயா said...

நான் இந்த படத்தைப் பார்த்து ஒன்னு புரிஞ்சுகிட்டேன் பாரதி. பொதுவாக பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று...
ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் பல சமயங்களில்..