சிகையலங்காரம்

Tuesday, December 25, 2012




  இன்று சிகையலங்காரம் செய்துக்கொள்ள சென்றேன். வழக்கத்தைவிட அதிக நேரம் ஆகிவிட்டது அங்கே. எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன் நான். சரி இதையும் கொஞ்சம் பதிவு செய்வோமே என்று நினைத்தேன்.
 எனக்கு நினைவு தெரிஞ்த நாளிலிருந்து எனக்கு பத்து வயது ஆகும்வரை என் கிராமத்தில் இருக்கும் ஒருவரிடம்தான் எப்போதுமே முடிதிருத்தம் செய்துக்கொள்வேன். அவர் பெயர் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. திரு.வேதநாயகம். அவர் வரு நாதஸ்வர கலைஞரும்கூட. அப்பாதான் என்னை மாதம் ஒருமுறை அவர் கடைக்கு கூட்டி செல்வார். அந்த நாற்காலியின் மீது ஒரு சின்ன பலகையை வைத்து அதில் என்னை உட்காரவைத்து முடிதிருத்தம் செய்வார். ( நான் அப்போ சின்ன பையன்.. அதான்.. )
நான் ஏழாவது படிக்கும்போதுதான் முதல்முறையாக என்னை அந்த நாற்காலியில் உட்காரவைத்து முடிதிருத்தம் செய்தார்கள். அட.. நான் இப்போ வளர்ந்துட்டேன்ல..
நான் அங்கே ரசித்த சில விஷயங்களை இங்கே பகிர்கிறேன்.
முதலாவதாக என்னை அதிகம் கவர்ந்தது எதிரும் புதிருமாக வைத்திருக்கும் கண்ணாடி பிம்பங்கள். அதில் நம் உருவம் கணக்கிலடங்காமல் தோன்றிக்கொண்டே இருக்கும். எத்தனை பிம்பங்கள் என் கண்ணுக்கு தெரிகிறது என்று நான் என்னால் இயன்றவரை எண்ணிக் கொண்டிருப்பேன்.
இங்கே எல்லா முடித்திருத்தகத்திலும் கட்டாயம் இரண்டு செய்தித்தாள்கள் இருக்கும். அப்படியே வானொலி அல்லது தொலைக்காட்சி இதில் எதாச்சும் ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
அப்புறம், விதவிதமாக சிகையலங்காரங்கள் கொண்ட சில போஸ்டர்கள் அங்கே ஒட்டப்பட்டிருக்கும். ஆனால் ஒரு விஷயம் நீங்க இங்க கவனிக்கனும். அதில் இருப்பதுபோல இவர்களுக்கு வெட்டிவிடவும் தெரியாது, அங்கே வரும் யாரும் அப்படி வெட்டிவிட வேண்டும் என்று கேட்கவும் மாட்டார்கள். வெறும் போஸ்டரைமட்டும் வெறித்து பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
பலவகையான பவுடர்கள் அங்கே வைத்திருப்பார்கள். பலவிதமான சீப்புகளும் இருக்கும். சீப்புகளிலும் இத்தனை வகை இருக்கா என்று அங்கேதான் தெரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஒரு பெருமிதம் என்ன தெரியுமா. பத்து வயதிலேயே Rolling Chair-ல நான் உட்கார்ந்திருக்கேன் என்பதுதான்.
ஒருசில கடைகளில் பார்த்திருக்கேன். முடிதிருத்தம் செய்பவர் ஒரு சிற்பி சிலையை செதுக்குவது போல, இவரும் தன் செயலை அவ்வளவு ரசித்து செய்வார். சிலர் இருக்கிறார்கள். ஒருவன் சிக்கிவிட்டான் என்று நம் தலையை ஒருவழி செய்துவிடுவார்கள்.
இன்னும் இங்கே நான் ரசித்த விஷயங்கள் ஏராளம். நேரம் இல்லாத காரணத்தால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

 - அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: