அன்பின் ஐந்திணை

Tuesday, August 11, 2020



அவள் மலைக் கோயிலுக்கு வந்தாள்..
எவருமறியாமல் நாங்கள் சந்தித்தோம்.
இருவரும் தனிமையில் இனிந்திருந்தோம்..
ஓர் திங்களுக்குள் வந்து அவளை மணப்பதாய் கூறிப்பிரிந்தேன்..

என் வருகைக்காக அவள் காத்திருந்தால்..
நான் சொன்ன ஓர் திங்களும் முடிந்தது..
என்னைக் காணாமல் அவள் வாடினாள்..
உடல் மெலிந்தாள்.. உள்ளம் நொந்தாள்..

நான் வேறொருத்தியை மணந்திருப்பேனோவென ஐயம் கொண்டாள்..
என்மீது கடுங்கோபமும் கொண்டாள்..
என் வருகையை மீண்டும் எதிர்நோக்கியிருந்தாள்..
என்னை திட்டித்தீர்க்க காத்திருந்தாள்..

அவளும்நானும் இனிதாய்வாழ,
நான் கடல்கடந்து பொருளீட்ட சென்றிருப்பதை கேட்டறிந்தாள்..
என் பயணத்தில் எனக்கென்னாகுமோ என்று துடித்தாள்..
என் வருகை நலமுடன் இருக்க வேண்டிக்கொண்டாள்..

கடற்பயணம் முடிந்து மாநிலம் வந்தடைந்தேன்..
அவளைக்காண நான் வரும் பாதை,
கொடுந்துயரம் நிறைந்த பாதையென அறிந்து அவள் சோகமுற்றாள்..
எனக்கென்னாகுமோ என உயிர் வருந்தினாள்..

பல துயரங்கள் கடந்து
அவளை அடைந்தேன்...
அவளின் கோபத்தை சமாளித்தேன்..
அவளின் அன்பில் மூழ்கிபோனேன்..
அவளை ஊறரிய மணமுடித்தேன்..


******

சங்க இலக்கியத்தில் அன்பின ஐந்திணை என்பார்கள்.
குறிஞ்சி, முல்லை, மருந்தம், நெய்தல், பாலை.

ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு.
குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

ஐந்திணைகளுக்கான உரிப்பொருள் இவை. இவற்றை எனக்கு புரிந்தவாறு, உங்களுக்கு புரியுமாறு மேலே எழுதியிருக்கிறேன்.

நன்றி

* தினேஷ்மாயா *

0 Comments: