இந்தியாவே ! விழித்துக்கொள் !

Tuesday, January 10, 2017



இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரிடம் அடிமையாய் இந்தியா இருந்தது. அப்போது அவர்கள் போடும் சட்டம் மக்களுக்கு எதிராக இருந்ததாலும், அவர்கள் நம்மை அடிமைப்படுத்தியதாலும் மக்கள் வீதியில் இறங்கி போராடினர். தங்கள் சுதந்திரத்துக்காக போராடியதால் நம் நாட்டின் வளர்ச்சி சுமார் 200 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது எனவும் கூறலாம். ஆனால், சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளாகியும் இன்று மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜம்மு மக்கள் அமைதியான வாழ்க்கைக்காக போராட்டம், வடகிழக்கு மக்களும் தங்களின் இழந்த உரிமைகளுக்காக போராட்டம், ஜார்க்கண்ட் மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராட்டம், மேற்கு மற்றும் வடமேற்கில் தண்ணீர் பிரச்சனை, மத்தியில் விவசாயிகள் இறப்பு, குஜராத்தில் அணை வரக்கூடாது என்பதற்காக, இதோ இங்கே தமிழகம் - மீனவர் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, காவிரி பிரச்சனை, இப்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை, நேற்று பொங்கலுக்கு பொதுவிடுமுறை இல்லை என்ற பிரச்சனை...

அப்பப்பா !

என்ன நடக்கிறது இங்கே !? 

130 கோடி மக்கள் இருக்கிறோம் இங்கே. எவ்வளவு ஆக்கப்பூர்வமான சக்தி நம் தாய்நாட்டுக்கு இருக்கிறது. அதை அரசாங்கம் சரிவர பயன்படுத்தாமல் இருப்பதை கண்டு வருந்துகிறேன். இப்படி எத்தனைக்காலம் மக்கள் போராட்டத்திலேயே தங்கள் சக்தியை வீணாக்க வேண்டும். உலக மேடையில் நாம் எப்போது முன்னேறுவது ?

இதற்கு பதில் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது என்று மக்கள் ஊமையாக இருக்க கூடாது. நீங்கள் தேர்ந்தெடுப்பவர்தான் அரசாங்கத்தில் இருக்கிறார் என்பதை மறவாதீர்.

* தினேஷ்மாயா *

0 Comments: