அவ மேல ஆச வச்சான்

Monday, February 23, 2015




டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ
டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ

அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் மச்சான்
அழுமூஞ்சா போனான் மச்சான்
வருவான்னு பூச வச்சான்
வழிமேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்

ஒரு கண்ணாடி கண்ணால ஒடஞ்சான்
அவ நெஞ்சோடு நெஞ்சு வச்சு கடஞ்சான்
வெத வைக்காம உள்ளூர வெளைஞ்சான்
அத வெள்ளமா பண்ண நித்தம் அலைஞ்சான்

டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ
டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ

கரையேறி வந்த மீனு
கருவாடா போகுமுன்னு
புரியாம போச்சே நண்பா
அறியாம சொன்ன சொல்லு
பழிவாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா

திசை இல்லாம
அப்போ நான் திரிஞ்சேன்
வழி இல்லாம
இப்போ இங்க ஒரஞ்சேன்
விதி பந்தாட
காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம
சொட்டுசொட்டா கரஞ்சேன்

டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ
டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ

வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு 
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சே தான் போகுமுன்னு 
முழுசா நீ நம்பி நில்லு

அவ வரும் போது ஆனந்த சாரல்
வழி எங்கேயும் வண்ண வண்ண தூரல்
இது உசுரோட ஓயாத தேடல்
அட ஒரு போதும் கெட்டதில்ல காதல்

வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சே தான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ
டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலோ

படம்: கயல்
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: ஒரத்தநாடு கோபு

* தினேஷ்மாயா *

0 Comments: