17 ரூபாய் எங்கே போச்சு ?

Saturday, February 28, 2015




சில தினங்களுக்கு முன், ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தானியங்கி மையத்தில் பணம் எடுக்க சென்றேன். அந்த வங்கியில்தான் நான் கணக்கு வைத்திருக்கிறேன். பணம் எடுத்து பல தினங்களாச்சு அதனால் எவ்வளவு பணம் என் கணக்கில் இருக்கிறதென்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், தோராயணமாக 500 ரூபாய் வைத்திருக்கிறேன் என்று மட்டும் நினைவிருக்கிறது. அன்று பணம் எடுக்க சென்றபோது, ஒரு அவசர தேவைக்காக என் கணக்கில் இருந்து 500 ரூபாய் பணம் வேண்டுமென்று தானியங்கி மையத்தில் பதிவு செய்தேன், ஆனால் கணக்கில் பணம் இல்லை என்று பதில் வந்தது. எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்த்தேன். 499.95 இருந்தது. 5 காசுகள் குறைவாக இருந்தமையால் என்னால் 500 ரூபாய் பணம் எடுக்க முடியவில்லை. சரியென்று 400 ரூபாய் மட்டும் பணம் எடுத்துவிட்டு வந்தேன். சில மணிநேரம் கழித்து, என் கணக்கில் இருந்து 17 ரூபாய் பிடித்தம் செய்ததாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஏன் என்று என் இணையம் மூலமாக என் கணக்கில் சென்று பார்த்தபோது, பணம் குறைவாக இருந்து அதிக பணம் வேண்டுமென்று எடுக்க முயன்று அதை தானியங்கி மையம் நிராகரித்ததால், அதற்கு சேவை கட்டணமாக 17 ரூபாய் பிடித்தம் செய்த்தாக கூறப்பட்டது.

என்னடா இது !

என் கணக்கில் இல்லாத பணத்தை நீங்கள் கொடுத்துவிட்டு அதிகம் கொடுத்துவிட்டோம் என்று சொல்லி பணம் பிடித்தம் செய்தாலும் பரவாயில்லை. என் கணக்கில் பணம் எடுக்க நினைத்து, நான் கேட்ட பணம் நிராகரிக்கப்பட்டு, பின் அதைவிட குறைவான பணத்தைதானே எடுத்தேன். இதற்கு எதற்காக 17 ரூபாய் பிடித்தம் செய்யனும். ஒருவேளை, நான் வங்கி கிளைக்கு நேராக சென்று, ரூபாய்.499.95 இருக்கும் பட்சத்தில், 500 ரூபாய் எடுக்க நினைத்தால், உங்கள் கணக்கில் அவ்வளவு பணம் இல்லை, நீங்கள் போதுமான பணம் இல்லாமல் பணம் எடுக்க வந்தமையால் உங்கள் கணக்கில் இருந்து 17 ரூபாய் பித்தம் செய்துக்கொள்கிறோம் என்று சொன்னால் எப்படி இருக்கும் ?

மக்களின் நலனுக்காகவே வங்கிகளை அரசுடமையாக்கினார்கள். ஆனால் வங்கிகள் மக்களின் ரத்ததையும் உழைப்பையும் உறிஞ்சிதானே தங்கள் வியாபாரத்தை பெருக்குகிறார்கள். 17 ரூய்பாய் என்பது சிறிய தொகையாக இருந்தாலும், தினமும் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு ஏழையின் கணக்கில் இருந்து இப்படி பணம் எடுப்பது அவனை பெரிதும் பாதிக்கும் அல்லவா ?

முதலில், வங்கிகள் தேவையற்ற விடயங்களுக்காக சேவை கட்டணம் வசூலிப்பதை தடுத்தாக வேண்டும். சேவைக்கு எதற்கடா கட்டணம் ???

மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் வரை இதுபோன்ற அவலநிலை அன்றாடம் தொடர்துக்கொண்டேதான் இருக்கும்..

* தினேஷ்மாயா *

0 Comments: