இஸ்திரி ஏன் செய்யறோம்

Monday, October 21, 2013


      என் சிறு வயதில் என் அப்பா துணிகளை நான் தான் இஸ்திரி செய்வேன். என் அம்மா எனக்கு சிறுவயதிலேயே இஸ்திரி செய்வது எப்படி என்று சொல்லிகொடுத்தாச்சு. இன்றுவரை என் துணிகளை நான்தான் இஸ்திரி செய்துவருகிறேன். இன்று காலை இஸ்திரி செய்யும்போது என் சிறுவயது நினைவு லேசாக எட்டிப்பார்த்தது. 

    சித்திரை வெயில் காலம் அது. அப்போது அப்பாவின் துணியை இஸ்திரி செய்யச்சொல்லி அம்மா கொடுத்தார்கள். நான் சொன்னேன், இதுதான் வெயில் காலமாச்சே இப்போ எதுக்கு இஸ்திரி செய்யனும்னு கேட்டேன். உடனே அம்மா எதுக்கு நாம துணியை இஸ்திரி செய்து அணிகிறோம் என்று தெரியுமா என்றார்கள். நான் உடனே, குளிர் காலத்தில் இஸ்திரி செய்து அணிந்தால் கொஞ்சம் இதமாக இருக்குமே என்றுதான் அப்படி செய்கிறோம் என்றேன். அம்மா சிரித்துவிட்டு, இல்லப்பா, நாம் துணியை துவைக்கும்போது நிறைய சுறுக்கங்கள் ஏற்படும். அதை சரி செய்யவே நாம் துணியை இஸ்திரி செய்து அணிகிறோம் என்றார். 

     அந்த நிகழ்வை நினைத்து இன்று காலை சிரித்துக்கொண்டேன். அவ்வளவு வெகுளியாய் இருந்திருக்கிறேன் என்று..

* தினேஷ்மாயா *

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://dhineshmaya.blogspot.in/2013/10/blog-post_9492.html