கல்வி

Monday, October 21, 2013


  கல்வி ஒருவனுக்கு தன்னடகத்தை கற்றுத்தர வேண்டும். ஆனால் இன்றைய கல்வி, கல்வி கற்ற ஒவ்வொருவனுக்கும் தலைக்கனத்தையே கற்றுத்தருகிறது என்பதே வேதனையான உண்மை. நாலு எழுத்து படித்துவிட்டோம் என்பதால் இந்த படித்தவர்கள் ஆடும் ஆட்டம் தாங்கமுடியாததாய் இருக்கிறது. ஆங்கிலப்புலமை என்று சுற்றித்திரிபவர்கள் வேறு. நீ இருக்கும் இடத்தில் அனைவருக்கும் என்ன மொழி தெரிகிறதோ அந்த மொழியில் பேசுவதுதான் இயற்கை. ஆனால் உன்னைச்சுற்றி இருப்பவர்கள் ஒரு மொழி அறிந்திருக்க நீ வேறு ஒரு மொழியில் பேசுவதுதான் நீ கற்ற கல்வியா ? சான்றோர்கள் நிறைந்த சபையில்தான் உன் திறமையை நீ வெளிகாட்ட வேண்டுமே தவிர உன்னைவிட திறமை குறைவானவர்கள் இருக்கும் சபையில் நீ அதை வெளிபடுத்தக்கூடாது. 

  நம் முன்னோர்களின் அனுபவ கல்விக்கு ஈடாகுமா நாம் கற்று வைத்திருக்கும் இந்த ஏட்டு சுரைக்காயான புத்தக கல்வி ? சூரியனைப்பார்த்து மணி சொல்ல தெரியும் அவர்களுக்கு. ஆனால் கடிகாரம் இருந்தால் மட்டுமே உன்னால் மணி என்னவென்று சொல்லமுடியும். இந்த ஒரு உதாரணம் போதாதா நீ கற்ற கல்வி உனக்கு எவ்வளவு உறுதுணையாய் இருக்கிறது என்று.

   கல்வி எப்போது ஒருவருக்கு அறிவை தராமல் ஆணவத்தை தருகிறதோ அப்போதே அவனுக்கு அந்த கல்வி அழிவையும் தருகிறது என்று அர்த்தம்.

   கற்றது கையளவு. கல்லாதது உலகளவு.

* தினேஷ்மாயா *

0 Comments: