ஆதி திராவிடர்

Wednesday, October 30, 2013



  நம் இந்திய மண்ணில் ஆரியர்களின் படையெடுப்பிற்கு பின்னர்தான் இந்தியாவின் சரித்திரம் பெரும் மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால் அவர்களின் வருகைக்கு முன்னரே நம் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் திராவிட இன மக்கள். ஆதி திராவிடர்கள் பெரும்பாலும் நம் முன்னோர்களை குறிக்கும். இந்தியர்கள் முதலில் பழங்குடியின மக்களாகத்தான் இருந்தனர். திராவிட இனம்தான் நம் மண்ணின் தனித்துவம் வாய்ந்த இனம். ஆரியர்களின் இனம் நம் இனத்தோடு கலந்தது. பின்னர் வந்த மேலை நாட்டவர்களின் இனமும் நம் இனத்தோடு கலந்து இன்னும் பல இனங்களின் கலப்படம்தான் இன்று நம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் இன்னமும் நம் இந்தியாவில் பழங்குடியின மக்கள் இருக்கிறார்கள். இன்றளவும் தங்கள் இனத்தின் கலாச்சாரத்தை கட்டி காப்பாற்றுகிறார்கள்.

   இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், தற்கால இந்தியா எவ்வளவோ வளர்ச்சியை கண்டாலும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இன்னும் பாதாளத்திலேயேதான் இருக்கிறது. அரசாங்கமும் எவ்வளவோ கோடியை அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்த செலவு செய்தாலும் அது அவர்களுக்கு முழுவதுமாய் சென்று சேர்வதில்லை. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைக்கொள்வதுமில்லை.

     ஆனால் கலாச்சாரத்தில் உயர்துவிட்டதாய் கருதும் மக்கள் இவர்களை ஒரு காட்சிப்பொருளாய் பார்ப்பதுதான் வேதனையளிக்கிறது. இவர்களைவைத்து சுற்றுலா என்னும் பெயரில் வியாபாரம் நடக்கிறது. இதை அண்மையில் உச்ச நீதிமன்றமும் கண்டித்தது. இருப்பினும் நம் மண்ணின் பூர்வீக மக்களை நம் மக்களே மதிக்காமல் இருப்பது வேதனையாய் இருக்கிறது. அவர்களும் இந்தியர்கள்தான் அவர்கள்தான் உண்மையான இந்தியர்கள் என்பதை உணருவோமாக.

* தினேஷ்மாயா *

1 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உணர வேண்டிய கருத்துக்கள்...