மருதாணி..

Wednesday, September 29, 2010



எனக்கு கையில் மருதாணி வெச்சுக்க ரொம்ப பிடிக்கும். ஆனா கையில் தேவையில்லாத டிசைன்ஸ் எதுவும் வெச்சுக்க பிடிக்காது. எப்போது நான் மருதாணி வெச்சுக்கிட்டாலும் இப்படிதான் வெச்சுக்குவேன். கையில் ஓம் தவிர வேறு எதுவும் போட்டுக்க மாட்டேன். அப்புறம் அதைசுற்றி மயில்தோகைப் போல போட்டுக்குவேன். பெரும்பாலும் எனக்கு அம்மாதான் மருதாணி வெச்சு விடுவாங்க. சில சமயங்களில் என் தங்கையும் வெச்சுவிடுவா. ஒரு கையில் மட்டுமே மருதாணி வெச்சுக்குவேன். அதுவும் பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, இந்த மாதிரி விடுமுறைக்காலங்களில் தான் நான் அதிகம் ஊருக்கு செல்வேன். அப்போது அம்மாவை மருதாணி வெச்சுவிட சொல்வேன். காலையில் எழுந்ததும் மறக்காம என் கையை அம்மாகிட்ட இல்லனா தங்கைகிட்ட காட்டி நல்லா சிவந்து இருக்கானு கேட்பேன்.

இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் வாழ்க்கை நிறைஞ்சு இருக்கு என்பது என் நம்பிக்கை. அதான் எந்தவித தயக்கமும் இன்றி நானும் என் கைகளில் மருதாணி வெச்சுக்கறேன்....



அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: