இன்னொரு தூதன்

Saturday, January 17, 2015


இன்னொரு தூதன் வரவேண்டும்..

இந்த பாவியின் பாவத்தை போக்க...

உன்னை மட்டுகே காண்கிறேன்,

உலக அழகை பார்க்காத பாவியாகிவிட்டேன் நான்..

* தினேஷ்மாயா *

நக்கீரன் தோற்றான்


உன்னழகில் குறை கண்டுபிடிக்க முடியாமல்

அந்த நக்கீரனே தோற்றுவிட்டானடி..

* தினேஷ்மாயா *

சிறுவயது முதலே


உன் சிறுவயதில்

உன்னை பலர் கொஞ்சியதை

இன்னும் நினைவில் வைத்திருக்கிறாயோ ?

அதான் என்னிடம்

எப்போதும் கொஞ்சிப் பேசுகிறாயோ ?

* தினேஷ்மாயா *

கற்றோருக்கு..


கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு..

காதலிப்போர்க்கு காதலி இருக்கும் இடமெல்லாம் சிறப்பு..

* தினேஷ்மாயா *

அறிவே இல்லை


அந்த கிழவிக்கு அறிவே இல்லை..

கோழியை கூடையில் அடைக்க சொன்னால்,

தேவதையை அடைத்து வைத்திருக்கிறாள் !

* தினேஷ்மாயா *

குத்தகை


வெள்ளை நிறத்தை

ஒட்டுமொத்த தேவதைகளும்

குத்தகைக்கு எடுத்து கொண்டீர்களோ ?

* தினேஷ்மாயா *

இன்னும் எத்தனை நாள்


இன்னும் எத்தனை நாட்கள் தான்

கண்களாலேயே பேசிக்கொண்டிருப்பது ?

என் இதயத்தோடு சேர்ந்து இதழ்களும் துடிக்கிறதடி..

பதில் சொல்..

* தினேஷ்மாயா *

சிதைவுகள்



சிதைவுகள் -

நினைவுகளின் மறுபெயர்...

காலப்போக்கில் நம் நினைவுகள்

நிச்சயம் ஒருநாள் சிதைந்துதான் போகும்..

* தினேஷ்மாயா *

தங்கம்



வெட்டி எடுக்கும் தங்கத்தைவிட

உன்னை தொட்டு எடுக்கும் தங்கத்திற்கே 

அதிக விலை தருவேன் நான்..

* தினேஷ்மாயா *



இரண்டு கண்கள் மட்டுமே


இறைவன் ஒரு கஞ்சன்..

உன்னழகை காண

வெறும் இரண்டு கண்களைத்தான்

எனக்கு தந்திருக்கிறான் பார்..

* தினேஷ்மாயா *

தலைப்பு செய்தி


பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமே

அது உண்மையான துயரம்..

மற்றவர்களுக்கு

அது வெறும் மூன்று நாள்

தலைப்பு செய்தி..

* தினேஷ்மாயா *

அம்மா



அம்மா மட்டும்தான்

உணவை சமைத்து

அன்பை பரிமாறுவாள்...

* தினேஷ்மாயா *

திருமணம்



திருமணமும்

திருமணத்திற்குப் பிறகு வரும் காதலும்

அழகோ அழகு..

* தினேஷ்மாயா *

பட்டாம்பூச்சி கூட்டம்



கூட்டத்தில் இருந்து

பாதை மாறி வந்துவிட்டாயோ ?

உன்னைத்தேடி வருகிறது

பட்டாம்பூச்சி கூட்டம்.

* தினேஷ்மாயா *

பிழைப்பு



அனைவரும் வேலை செய்து பிழைக்கிறார்கள்..

நான் உன்னை காதல் செய்து பிழைக்கிறேன்..

* தினேஷ்மாயா *

அபிநயம்..



பரதத்திற்கு நீ கடன் கொடுத்த

உன் சொந்த பாஷைதான்

அபிநயம்..

* தினேஷ்மாயா *

ஆண்களுக்கு கவிதை !



பெண்களுக்காக மட்டுமே

கவிதை எழுதுகிறேனாம்!

நண்பர்கள் என்னை சாடுகின்றனர்..

ஆண்களுக்கென தனியாக

கவிதை எழுததேவையில்லை..

ஆண் வர்ணிப்பவனாகவும்

பெண் வர்ணிக்கப்படுபவளாகவும்

இருப்பதே எப்போதும் அழகு..

ஆண்களுக்காக கவிதை எழுதினால்

கற்பனையும் வற்றிவிடும்,

வார்த்தைகளும் வற்றிவிடும்..

வற்றாத நதி என்றால் அது எப்போதும்

பெண் தான்..

* தினேஷ்மாயா *

எதற்கு ?



இயற்கை தந்த அழகு போதுமே ..

செயற்கை அழகு உனக்கெதற்கு ?

தவணைமுறையில் என்னை கொல்வதற்கா ?

* தினேஷ்மாயா *

பேரழகு



மற்றவர்கள் கன்னத்தில் கைவைத்தால்

அது சோகம்..

நீ கன்னத்தில் கைவைத்தால்

அது பேரழகு…

* தினேஷ்மாயா *

கண்களை மூடிக்கொள்


கண்களை மூடிக்கொள்..

உன் கண்களில் அதிக போதை இருக்கிறதென்று


உன்னை கைது செய்துவிடப் போகிறார்கள்…

* தினேஷ்மாயா *

அபிஷேக தீர்த்தம்

Friday, January 09, 2015


அபிஷேக தீர்த்தம்..

* தினேஷ்மாயா *

வாசம்


பூவின் வாசத்தைவிடவும்

உன்னை நுகரும்போது - நான்

உணரும் வாசம்

என் சுவாசம் தீண்டுகிறது..

* தினேஷ்மாயா *


இறந்துவிடுவேன்


நீ சுவாசிப்பதை நிறுத்திவிடாதே...

நான் இறந்துவிடுவேன் !

* தினேஷ்மாயா *

விழிகள் துடிக்கிறது


இதயம் துடிப்பதை

அனைவரும் கேட்டிருப்பீர்கள்..

இவளைக் காண

என் விழிகளும்

துடிப்பதை பார்த்துண்டா ?

* தினேஷ்மாயா *

வயலின்


காதலை சொல்ல

பல வழி இருந்தாலும் -

நான் வயலின் கற்றுக்கொண்டிருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

விஞ்ஞானத்தில் கோளாறோ ?


நிலவுதான் பூமியை சுற்றுகிறது..

நிலவை எதுவும் சுற்றவில்லை என்று

விஞ்ஞானம் கூறுகிறது..

நிலவாகிய உன்னை நான் சுற்றிவருகிறேன்..

இதென்ன விஞ்ஞான கோளாறா ?

* தினேஷ்மாயா *

வரம் வேண்டுமா ?


இறைவன் என்னிடம்

வரம் வேண்டுமா ? என்று கேட்டால்,

வேண்டாம் -

“நீ” போதும் என்பேன் !

* தினேஷ்மாயா *

எறும்பு


எறும்பு ஊர கல்லும் தேயும்...

உன்னை காண காண மின்னல் பாயும்..

* தினேஷ்மாயா *

என்ன ஒரு முரண் நீ !



என்ன ஒரு முரண் நீ !

உன்னுள் காதலால் மூழ்கிப்போகிறேன்...

உன்னால் காதல் கடலில் மிதக்கிறேன்..

* தினேஷ்மாயா *

தாஜ்மஹால்


ஷாஜஹான் ஏற்கெனவே கட்டிவிட்டான்..

அவன் கட்டியிருக்காவிட்டால்

நான் கட்டியிருப்பேன்

உனக்கொரு தாஜ்மஹாலை ..

* தினேஷ்மாயா *

ஒரு கல் ஒரு கண்ணாடி



ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்.... ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஓ

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

திமிருக்கு மறு பெயர் நீ தானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே

கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்லு

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

படம் : சிவா மனசுல சக்தி
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  யுவன் சங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துகுமார்

நிலா நீ வானம் காற்று



நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிரென்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன நான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சின்மயி

தேடல்

Thursday, January 08, 2015


உன்னை தேடிக்கொண்டே இருக்கிறேன் ?

எங்கு இருக்கிறாய் ?

எப்போது கிடைப்பாய் எனக்கு ?

* தினேஷ்மாயா *

கல்வி ?

Wednesday, January 07, 2015


கல்வி பயின்றாச்சு..

கலவி பயில்வோமா ?

* தினேஷ்மாயா *

கண்மூடி திருமணம்


நம் திருமணத்தன்று

நான் என் கண்களை மூடிக்கொண்டுதான்

உனக்கு தாலி கட்டுவேன்..

இவ்வளவு அழகுடனும் அலங்காரத்துடனும்

ஒருத்தியை மிக அருகில் பார்க்கும் சக்தி

என் கண்களுக்கில்லை..

* தினேஷ்மாயா *

பொறாமை


இறைவனுக்கு பொறாமை...

அதனால்தான் உன்னை இந்த உலகில்

அதிக நாள் விட்டுவைக்காமல் தன்னிடம்

அழைத்துக்கொண்டான்...

( பி.கு. இவள் இப்போது நம்முலகில் இல்லை என்பதை கனத்த மனதுடன் பதிவுசெய்கிறேன் )

* தினேஷ்மாயா *

கவிதைக்காக



காதலிக்காக காத்து கிடப்பதைவிட

கவிதைக்காக காத்து கிடப்பதுதான்

கொடுமையிலும் கொடுமை...

* தினேஷ்மாயா *

புத்தம் புது காலை

Sunday, January 04, 2015



புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
கனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது
வழிகூடிடும் சுவைகூடுது
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

படம்: அலைகள் ஓய்வதில்லை / மேகா
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி / அனிதா

* தினேஷ்மாயா *

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா



ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோளக்காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடிப்போனாளே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடைய கூடு நானுடி
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோளக்காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

படம்: மெட்ராஸ்
வரிகள்: கபிலன்
இசை: சந்தோஷ் நாராயணன்
குரல்: பிரதீப்

* தினேஷ்மாயா *

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்



பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து
என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும்
சிறு நோய்யளவு ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐவிரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்
என்னுள்ளே என்னை கண்டவள்
யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்


படம் : ஐ
இசை: ஏ.ஆ.ரஹ்மான்
பாடியவர்கள்:  ஹரிசரண், ஷ்ரேயா கோஷல்
வரிகள்:  மதன் கார்கி

* தினேஷ்மாயா *

என்னுயிரே.. என்னுயிரே..




என்னுயிரே.. என்னுயிரே..
வா அருகே.. சாரிகையே..

நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்

என்னுயிரே.. என்னுயிரே..
வா அருகே.. சாரிகையே..

நீதானே எங்கும் நீதானே
பாரடியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுமே அன்பே.. உயிர் ஆதாரமே..

நீதானோ பெண்ணே நீதானோ
பாரதியே சொல்லும் சொப்பனமோ
உன்னாலே கண்ணே உன்னாலே
நான் ஒரு இறகாய் மிதந்தேனே
என் தென்றலாகி நீ வருவாய்
மதி மயக்கம் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே

என்னுயிரே.. என்னுயிரே..

படம்: மாலைப்பொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
குரல்: கார்த்திக்

* தினேஷ்மாயா *

போகும் பாதை தூரமில்லை



போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு

நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே..

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே..

படம்: பிசாசு
வரிகள்: தமிழச்சி தங்கபாண்டியன்
இசை: ஏரால் கொரேலி
குரல்: உத்ரா உன்னிகிருஷ்ணன்

இப்பாடலில் வரும் வயலின் இசையை என்னவென்று சொல்ல. படத்தோடு பார்க்கும்போது இந்த வயலின் இசைக்கு என் இதயம் சற்று நின்று துடிக்கிறது..

* தினேஷ்மாயா *

உன்ன இப்ப பாக்கனும்




உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்

ஒறவே மனம் தேம்புதே
உசுரே மனம் ஏங்குதே
நீ எங்கயும் போகாத
நான் வாறேன் வாடாத

உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்

இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
இணைந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
வரையோ விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ

உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்

இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி
பாயும் ஒளி நீயடி
கதிரே வந்து கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு

உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்

ஒறவே மனம் தேம்புதே
உசுரே மனம் ஏங்குதே
நீ எங்கேயும் காணாம எங்கதான் போனாயோ
உன்ன இப்ப பாக்கனும்...

படம்: கயல்
வரிகள்: யுகபாரதி
இசை: இமான்
குரல்: ஹரிசரண், வந்தனா

* தினேஷ்மாயா *

போதுமெனக்கு


காதலுக்கு கொஞ்சம் மேலே

காமத்திற்கு கொஞ்சம் கீழே

போதுமெனக்கு ..

* தினேஷ்மாயா *

நவரசமோ ?
































ஒவ்வொன்றும் நவரசத்தின் இன்னொரு சாயலாக தெரிகிறது..

* தினேஷ்மாயா *