சுற்றுகிற உலகத்திலே

Sunday, December 29, 2019

சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...

வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?
நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று

அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....

கன்னியை சுற்றி வரும் காளையும் இங்குண்டு...
கன்னியையும் காளையையும் சுற்ற வைக்கும் காதலும் இங்குண்டு....
அட பாட்டன் போனான் ,அப்பன் போனான்,பிள்ளைகளும் அவன் பின்னாலே..
அரசன் போனான் ,ஆண்டி போனான்,தொடர்ந்து சென்றவரும் பின்னாலே...
சுற்றிச்சுழன்றவர் வாழ்க்கையிலே,சுகத்தில் இருப்பவர்கள் யாருமில்லே...
எதை எதையோ சுற்றாதீர்,பதைபதைத்து நிற்க்காதீர்...

அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....

கல்விக்கு சுற்றும் மாணவரும்,வேலைக்குச் சுற்றும் பட்டதாரியும்,
மேல் பதவிக்காகச் சுற்றும் மனிதர்களும்,சிறு உதவிக்காகச் சுற்றும் எளியவரும்,
கல்வியும் பதவியும் கலை தரும் ஞானமும் மனிதனைச் சுற்றவில்லை...
வல்வினை தொல்வினை தன்னைச் சுற்றி வருவதை மனிதனும் உணரவில்லை...
உன்மேல் உன்னை விட பிரியமுள்ளாவர் உலகதிலுண்டோ?
உன்சுமைகளையே தன்சுமையென்று சுமப்பவருண்டோ?
பாரத்தை அண்ணாமலையில் போட்டு சுகமாய் பாடி ஆடிப்போ...
நேரத்தை வீணாய் கழிக்காமல் நீ சரணம் என்றே பாடிப்போ...

சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?
நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...

இசை தொகுப்பு: ராஜாவின் ரமணமாலை
இசை, வரிகள், குரல்: இசைஞானி இளையராஜா

* தினேஷ்மாயா *

0 Comments: