வேடிக்கை பொருட்கள் இல்லை..

Tuesday, May 26, 2015



நேற்று நண்பர்களுடன் சென்னையில் இருக்கும் தேவி திரையரங்கம் சென்றிருந்தேன். இடைவேளையின்போது, படத்திற்கு சில திருநங்கைகளும் வந்திருந்ததை கண்டேன். அவர்களும் நம்மைப்போல், வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான திண்பண்டங்களை வாங்கிசென்றனர். ஆனால், அவர்களை மற்றவர்கள் பார்த்த பார்வை எனக்கு கோபம் வரவைத்தது. அவர்களை ஏதோ ஒரு வேற்றுகிரகவாசி போலவும், வேடிக்கைப்பொருளை பார்ப்பது போலவும், ஒரு கேவலமான பார்வையோடு நோக்கினர். எப்போதுதான் இந்த சமூகம் மாறும் என்று நொந்துக்கொண்டேன். அவர்களும் நம்மைப்போன்ற சாமானியர்கள்தான். அவர்களை வேறு கண்ணோட்டத்தோடு பார்க்காமல் இருங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் கைம்மாறாக இருக்கும். சில பெண்களும்கூட திருநங்கைகளை கேலியாக பார்த்தனர். அனைவரும் மனிதர்கள்தான் என்பதை மறக்கவேண்டாம். தூங்கிக்கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பி, அனைவரிடத்திலும் மனித்ததோடு பழகுவோம்.

* தினேஷ்மாயா *

0 Comments: