ஆடியில காத்தடிச்சா...

Monday, July 17, 2017



இன்று ஆடி பிறந்தது. இன்றைய பொழுது மிகச்சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பிற்கும் சிவாலயம் செல்வதை சிலகாலமாக வழக்கமாக கொண்டுள்ளேன். அவ்வாறே இன்றும் அருகில் இருக்கும் அருள்மிகு பச்சைநாயகி உடனுறை பேரூர் பட்டீசுவரர் ஆலயம் சென்று தரிசித்து வந்தேன். 

  ஆடி மாதம் நன்றாக காற்று வீசி, ஐப்பசியில்.நல்ல மழை பொழிந்து மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு போக வேண்டும் என்று பொதுவான ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு வந்தேன். சரி ஆடி காற்று அம்மியையே நகர்த்துமாமே. எப்படிதான் இருக்கும் பார்த்துவிடலாம் என்று மொட்டை மாடியில் இன்று உறங்க வந்தேன். அறையில் இருக்கும் நண்பர்களை அழைத்தால், அனைவரும் பயப்படுகின்றனர். குளிர் தாங்க முடியாது, நான் வரமாட்டேன் என்றே எல்லோரும் சொன்னார்கள். அப்படி என்னதான் குளிர் அடிக்கப்போகிறது அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று மொட்டைமாடிக்கு வந்துவிட்டேன். இதை மொட்டைமாடியில் இருந்துதான் பதிவு செய்கிறேன். மேலே இருக்கும் புகைப்படம், தொலைவில் தெரியும் அந்த ஒளி, மருதமலை முருகன் ஆலயத்தின் வெளிச்சம். இங்கே இருந்து அப்படித்தான் தெரியும். 

    அருமையான காற்று. கொஞ்சம் ஆளை சாய்க்கும் காற்றுதான். சில்லென்ற காற்று. அடடடடடா... இயற்கையின் அருமையான கொடையை மக்கள் ஏன் ஏற்க மறுக்கின்றனர் என்றுதான் புரியவில்லை. சரி, மற்றவர்கள் இரசிக்காவிட்டால் என்ன, நாம் இரசிப்போம் என்று துணைக்கு அதோ அங்கே தொலைவில் இருக்கும் என் நண்பன் மருதமலை முருகனை அழைத்துக்கொண்டேன். இன்னும் துணைக்கு இசையை அழைத்துக்கொண்டேன். 

நேரம் அதிகம் ஆகிவிட்ட காரணத்தால், இப்போதைக்கு விடைப்பெறுகிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: