வறுமையின் நிறம் சிவப்பு..

Tuesday, December 06, 2016



சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். குறிப்பாக கே.பாலசந்தர் அவர்களின் திரைப்படம், கமல் அவர்கள் நடித்த திரைப்படம் என்பதைவிட, இந்த தலைப்பிற்காகவே இத்திரைப்படத்தை பார்த்தேன்.

படமெங்கும் பாரதியார்தான் தெரிகிறார். பாரதியின் கவிதைகளை தேவைப்படும் இடங்களில் வசனமாகவும் பாடல்களாகவும் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு ஒரு வீரியத்தை தருகிறது என்றே சொல்லலாம். மெல்லிசை மன்னரின் இசையும் அருமை. படத்திற்கு இன்னுமொரு பலம்.

திரைப்படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்த வேலையில்லா திண்டாட்டத்தை அருமையாக சித்தரித்திருக்கிறார் K.B.

ஒட்டுமொத்த படத்தை ரசித்தேன். அதைவிட சில வசனங்கள என்னை அதிகம் கவர்ந்தது. அதில் ஒன்று இது...

கமல் தன் புகைப்படத்தை ஒரு குப்பைத்தொட்டியில் தேடிக்கொண்டிருப்பார். அப்போது நடக்கும் உரையாடல் இது

"கமல்: என்னங்க எடுக்க எடுக்க ஆரஞ்சு பழத்தோலா வருது. இந்த கட்டடத்துல வசதிக்காரங்க ரொம்ப ஜாஸ்தியோ ?
ஸ்ரீதேவி: இல்ல.. வியாதிக்காரங்கதான் ஜாஸ்தி"

"ஸ்ரீதேவி: வேணாங்க விட்டுடுங்க..
கமல்: இதுல என்னங்க இருக்கு. இன்னும் தோண்டினா சோசலிசமே கிடைச்சாலும் கிடைக்கும்"

சோசலிசம் என்பது குப்பைத்தொட்டியில்தான் இருக்கிறதென்பதை எவ்வளவு சாதாரணமாக போகிற போக்கில் சொல்லி மக்களுக்கு புரியவைக்கிறார் KB

இன்னும் படத்தில் அதிக வசனங்கள் என்னை கவர்ந்தது. படத்தை இரசித்து பார்த்தேன். நேரம் கிடைக்கும்போது இத்திரைப்படத்தை பொறுமையுடன் இன்னொருமுறை பார்க்கவேண்டும்..

* தினேஷ்மாயா *

0 Comments: