பள்ளிப் பருவ காதல்..

Sunday, December 20, 2015


பள்ளிப் பருவ காதல்..

அவள் பெயரை வருகை பதிவேட்டில் யாருமறியா வண்ணம் திருட்டுத்தனமாய் பார்ப்பது..

அவள் அமரும் இடத்தில் யாரும் வருவதற்கு முன்னர் சென்று அமர்வது..

அவள் வரும் மிதிவண்டியின் அருகில் என் மிதிவண்டியை நிறுத்திவைப்பது..

அவள் பிறந்தநாளன்று நண்பர்களுக்கு நான் மிட்டாய் கொடுப்பது..

அவளிடம் தயங்கி தயங்கி பேசுவது..

அவள் இருக்கும்போது அவளின் நெருங்கிய தோழியிடம் வேண்டுமென்றே சண்டையிடுவது..

அவள் கடந்து செல்கையில், நண்பர்கள் என் பெயரை சத்தமாய் அழைக்க நான் அவர்களை அடிப்பது...

காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இதுதான் உலகின் புனிதமான காதல் என்று நினைப்பது..

வராத கவிதையை வரவைத்த் எழுத முனைவது..

பாட்டு போட்டியின்போது அவள் எங்கிருக்கிறாளோ அவளையே பார்த்துக்கொண்டு பாடுவது..

வேண்டுமென்றே அவளிடம் பேனா கடன் வாங்கி திருப்பி தராமல் இருப்பது..

அவள் அப்பா பெயரையும் அவள் வரும் இடத்தின் பெயரையும் எப்படியோ தெரிந்துக்கொண்டு YELLOW PAGES-ல் அவள் வீட்டு தொலைபேசி எண்ணை தேடுவது..

ஒருவழியாக அவள் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அடிக்கடி அழைத்து அவள் குரலுக்காக ஏங்கியிருப்பது..

இப்படி பள்ளிப் பருவ காதல் பல நீங்கா நினைவுகளோடும் அனைவர் மனதிலும் இன்னமும் இருக்கும் என்று நினைக்கிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: