கலாம் அவர்களுக்கு நம் சலாம்...

Wednesday, July 29, 2015


அப்துல் கலாம்..

    இப்பெயருக்கு சொந்தக்காரர் இந்து, கிறித்தவர், இசுலாமியர் இப்படி இன்னும் எந்த மதமானாலும், என்ன இனமானாலும் அனைவரும் சொந்தம் கொண்டாடும் ஒருவர்.

    சிகரம் சரிவதை கண்டதில்லை. இன்று காண்கிறேன். 27-07-2015... இந்நாளை என் நாட்காட்டியில் இருந்து கிழிக்க மனம் வரவில்லை... அந்த நாள் வராமலே இருந்திருக்கலாமோ என்றும் கூட எண்ணம் தோன்றும்.

    எளிமையில் சிகரம் நீ. ஒழுக்கத்தின் இமயம் நீ. இளைஞர்களின் எழுச்சி நீ.

     பலர் பேசுவார்கள், சில செய்வார்கள். ஆனால் உங்களைப்போன்ற ஒருவர் தான் சொன்னபடி செய்யவும், வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டுவார்கள்.

  உம்மைப்பற்றி எழுத பேனாவை எடுத்தால், என் பேனா மை கூட கண்ணீரைத்தான் உமிழ்கிறது ஐயா. 

   இதுபோன்றதொரு மனிதனை மீண்டும் இப்பூமித்தாய் காணமுடியுமா என்பது சந்தேகமே.

     கனவு - உம்முடைய தாரக மந்திரம். இந்நாள் கனவாக இருக்ககூடாதா என்று நினைக்கிறது மனம்.

         நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததால் புனிதன் ஆகினேன் நான். உம் கருத்துக்கள், உம் செயல்கள், உம் சாதனைகள், உம் எளிமை, உம் ஒழுக்கம், உம் பன்முக மற்றும் தொலைநோக்குப் பார்வை எல்லாவற்றாலும் ஈர்க்கப்பட்டு உங்களை கதாநாயகனாக கொண்டிருக்கும் உலக இளைஞர்களில் நானும் ஒருவன்.

     நம் நாட்டின் மீது நீவிர் எங்களுக்கு கொடுத்த கடமையை திறம்பட செய்து முடிப்போம் ஐயா.

       சரித்திர நாயகன் கலாம் அவர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த சலாம்..

       நீங்கள் இம்மண்ணில் புதைக்கப்படவில்லை... விதைக்கப்பட்டுள்ளீர்கள்..

- கண்ணீருடன் - 

* தினேஷ்மாயா *

0 Comments: