முதல் மரியாதை

Thursday, August 15, 2013



இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு என் அரசாங்க உடையில் அலுவலகத்திற்கு சென்று தேசிய கொடியை ஏற்றி அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடினோம். 

வண்டியில் நான் என் வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தேன். வீட்டின் அருகே வருகையில், சில மாணவர்கள் பள்ளியில் விழா முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். வண்டியில் உடையுடன் என்னைப்பார்த்த அவர்கள், Good Morning Sir என்று சொல்லி எனக்கு Salute அடித்தார்கள். நானும் அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வணக்கம் தெரிவித்துவிட்டு வண்டியை நகர்தினேன். எனக்கு கிடைத்த முதல் மரியாதையை இங்கே தவறாமல் பதிய விரும்பினேன். காக்கி உடையில் இருப்பது எனக்கும் ஒரு சுயமரியாதையையும் கௌரவத்தையும் கொடுக்கிறது. என் நாட்டு மக்களுக்கு சேவை புரிய எனக்கு வாய்ப்பளித்த இந்த தேசத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

வந்தே மாதரம் !!

* தினேஷ்மாயா *

0 Comments: