ஆனந்த யாழை மீட்டுகிறாய்

Friday, August 30, 2013




மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று..

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புள்ளில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

படம்: தங்க மீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ஶ்ரீராம் பார்த்தசாரதி


பல நாட்களுக்குப்பிறகு கண்களையும் மனதையும் குளமாக்கிய பாடல். இன்னும் படம் பார்க்கவில்லை. அதற்குமுன்னரே இப்பாடல் என்னை அதிகம் ஈர்த்துவிட்டது. கண்கள் மூடி வரிகளையும் இசையையும் உணர்ந்து ரசித்துப்பாருங்கள். கண்கள் குளமாவதை உணர்வீர்கள்..

* தினேஷ்மாயா *

1 Comments:

Sabana.Suthan said...

கண்கள் குளமானது உண்மை தான்.