அவள் -

Monday, March 16, 2015


ஒரு ஊரில் ராஜகுமாரி ஒருத்தி இருந்தாளாம்..

அவள் -

எனை கொல்வதற்காகவே பிறந்தாளாம்..

* தினேஷ்மாயா *

கவிதை வராது


நீ எவ்வளவு யோசித்தாலும்,

கவிதை வராது பெண்ணே..

ஒட்டுமொத்த கவிதையையும்

உனக்காக நான்

வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

யார் ? என் மனமா ?



யார் ?
என் மனமா ?
கண்ணீர் உன் தவமா ?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா ?
நீர் வேண்டாமா?
ஓ… ஓ…

இலை இதோ..
கிளை அதோ..
ஈரம் தீர்ந்து
ஏங்கும் பொழுது..
மேகம் தேடும்
ஏழையின் மனது..
உயிரின் சுவரை
திறக்கும் பொழுது..
கண்ணின் மை தொட்டு
காதல் எழுது..

யார் ?
என் மனமா ?
கண்ணீர் உன் தவமா ?
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா ?
நீர் வேண்டாமா?
ஓ… ஓ…

படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: தீபு

சென்ற வாரம்

சென்ற வாரம் 4 திரைப்படங்கள் பார்த்தேன். அனைத்தும் மனதை கவர்ந்தன.

1. காக்கி சட்டை



        வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. சில பாடல்கள் மட்டும் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் இரண்டாம் பாகம் வேகம் சற்று குறைவு. கதாநாயகி அவ்வப்போது வந்து போகிறார். நடனம் ஓ.கே. ஒளிப்பதிவு சில பாடல்களில் ரசிக்கும்படியாக இருந்தது. 

2. எனக்குள் ஒருவன்


        கன்னட படத்தின் மறு ஆக்கம் என்று சொல்லியிருந்தார்கள். படம் அருமையாக இருந்தது. இரண்டுமுறை திரையரங்கம் சென்று பார்த்தேன். கதையை நகர்த்திய விதம் பிரமாதம். இதுபோன்ற கதையை ரசிகர்களை கணிக்க வைத்து அவர்களின் கணிப்பு தவறு என்று ஒவ்வொரு முடிச்சுகளாக கடைசியில் அவிழ்த்த விதம் பாராட்டுக்குறியது. அனைத்து பாடல்களும் அருமை. “யார்? என் மனமா ? ” , “ பூ அவிழும் பொழுதில்” இந்த இரண்டு பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கும்படி இருக்கிறது. கதாநாயகி சில நேரங்களில் சமந்தா போல் திரையில் தெரிகிறார். ஒட்டுமொத்தமாக, ஒரு புதிய முயற்சி. சில இடங்களில் ஹாலிவுட்டை நினைவுப்படுத்தினாலும். தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

3. ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை.


       இயக்குனர் சேரனின் C2H என்னும் திட்டம் மூலம் வீட்டிலேயே படம் பார்க்கும் வசதியில் முதலில் வெளிவந்த படம். அவரின் முயற்சிக்கு ஆதரவளிக்கவே இந்த படத்தை வாங்கி பார்த்தோம். வீட்டில் அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்ற கதை. கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் பார்க்க சலிக்கவில்லை. சில இடத்தில் மட்டும் கதையை கொஞ்சம் இழுத்ததுபோல் தெரிகிறது. படத்தில் காதல் காமம் இப்படி எதுவும் இல்லை. அதற்கும் மேலாக புனிதமான நட்பை காட்டி நம்மை கட்டிப்போடுகிறார் சேரன். மிக அருமையான கதைக்களம். மறுபடியும் பார்க்கலாம்.

4. ராஜதந்திரம்


       அதிகம் பரிச்சயமில்லாத ஆனால் மறக்காத திரை பிரபலங்களை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. நல்ல படம். ஏற்கெனவே வந்த பல கதைகளை நினைவூட்டினாலும், திரைக்கதை வித்தியாசமாக இருப்பதால், படத்தில் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படவில்லை. ஒரே பாடல் வந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. 

* தினேஷ்மாயா *

பூ அவிழும் பொழுதில்

Friday, March 13, 2015



பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேகம் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே

என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே

வான்வெளி மீதே
வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே
அவள் உதித்தாளே
வெண்சிறகேற்றால்
என் விரல் கோர்தாள்
கண்களை மறைத்தே
கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும்
ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும்
பூ மழையே

பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேயும் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே

என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே

படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: பிரதீப் குமார்

* தினேஷ்மாயா *

அழகி


பெண்ணை அழகுப்படுத்த,

பொன்னை வைப்பார்கள்...

இங்கு -

பொன்னை அழகுப்படுத்த

உன்னை வைத்திருக்கிறார்கள்..

* தினேஷ்மாயா *

உன்னை கண்டதும்

Monday, March 09, 2015


வாழ்வின் சோகமனைத்தும்

உன்னை கண்டதும்,

ஓர் நொடியில் மறைந்துபோகிறது..

* தினேஷ்மாயா *

யார் ?


யார் ?

என் மனமா  ?

என்னை எட்டி பார்ப்பது..

* தினேஷ்மாயா *

ஆக்ஸ்போர்டு அகராதி

Sunday, March 08, 2015


ஆக்ஸ்போர்டு அகராதியில்,

உன் பெயரை சேர்க்க போகிறார்களாம்..

அழகு என்ற வார்த்தைக்கு அர்த்தமாக..

* தினேஷ்மாயா *

என்ன பார்க்கிறாய் ?


அங்கே என்ன பார்க்கிறாய் ?

என்னை உன் பார்வையில் கொன்றது போதாதா ?

கண்களை மூடி கொஞ்சம் ஓய்வெடு..

மீண்டும் எனை கொல்ல உன் கண்களுக்கு சக்தி வேண்டாமா ?

* தினேஷ்மாயா *

எது அழகு

Wednesday, March 04, 2015


பூக்கள் சூடப்பட்டிருப்பதால்

உன் கூந்தல் அழகா ?

உன் கூந்தலில் சூடப்பட்டிருப்பதால்

அந்த பூக்கள் அழகா ?

எது அழகு ?

* தினேஷ்மாயா *

உலக நியதி



விளம்பரத்திற்காக செய்யும்

எந்த விஷயமானாலும்,

விரைவில் மறக்கப்படும் !

- உலக நியதி -

பி.கு.: பயபுள்ள கருத்தெல்லாம் சொல்றாப்ள ;-)

* தினேஷ்மாயா *

மஞ்சள்



நிறங்கள் ஆயிரமாயிரம் இருக்க,

மஞ்சள் நிறத்தை உனக்கு மட்டும்

சொந்தமாக எழுதி கொடுத்தது யாரோ ?

* தினேஷ்மாயா *

கட்டுப்பாட்டில் மனம்


மனதை உன் கட்டுப்பாட்டில் வை..

மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள்..

அப்படியிருந்தால், இவ்வுலகில்

காதல் என்ற ஒன்று பிறந்திருக்காதே..

* தினேஷ்மாயா *

ராணி நீ



தன்பால் அழகை வைத்து

உன்பால் என் மனதை தைத்து

பண்பால் என் உலகை வெல்லும் ராணி

நீ..

* தினேஷ்மாயா *

அன்பால் உலகை


அன்பால் உலகை வெல்லும் கலையை

எனக்கு கற்றுத்தந்தவள் நீதானே..

* தினேஷ்மாயா *

முடிவதில்லை..


உன்னைப்பற்றி சிந்திக்காத

எந்தநாளும் எனக்கு

முடிவதில்லை..

* தினேஷ்மாயா *

மூன்று குணங்களும் என்னுள் !







இம்மூன்று குணங்களும் என்னுள் !!

* தினேஷ்மாயா *

கூடமேல கூட


கூடமேல கூட வெச்சு !

* தினேஷ்மாயா *

குழந்தை போல்


நான் குழந்தையாய் இருந்தபோது அழுதிருக்கிறேன்..

நீ என்னை மீண்டும் குழந்தையாக்கினாய்..

கண்ணாமூச்சி காட்டி என்னை விட்டு சென்றாய்..

மீண்டும் குழந்தைபோல் அழவைத்துவிட்டாய்..

* தினேஷ்மாயா *

பயப்படாதே நிலவே


பயப்படாதே நிலவே !!

அந்த வெள்ளிச்சிலை,

இந்நேரம் உறங்கியிருப்பாள்.

தைரியமாக நீ உலாவரலாம்..

* தினேஷ்மாயா *

தைரியமிருந்தால்


என் கனவு கோட்டையை தகர்க்கிறாயே !

உனக்கு தைரியமிருந்தால்,

என் மனக்கதவை திறந்து உள்ளே வா !!

என் காதலை நேருக்கு நேர் சந்திக்க..

* தினேஷ்மாயா *

தொலைதூர பயணம்


பயணம் தூரம்தான்..

தொலைதூரம்தான்..

தனியாக செல்லவும் தயக்கம்..

துணையாய் நீ வருவாய் என,

இங்கேயே நின்றுக்கொண்டிருக்கிறேன்..

அதே இடத்தில் -

என் பயணத்தை தொடராமல்..

* தினேஷ்மாயா *

கண் திறந்து

Monday, March 02, 2015


அனைவருக்கு காதல் கண்ணை மறைக்கும்..

எனக்கோ -

காதல்தான் என் கண்ணை திறந்துவைத்தது..

* தினேஷ்மாயா *

அலைய மாட்டேன்


காதலியைத் தேடி நான் அலையமாட்டேன்..

அழகான காதல் என்னுள் இருக்கிறது -

அதற்கேற்ற ஒருத்தி தானாகவே வருவாள்..

காதலியைத் தேடி அலையும் நேரத்தில் -

என் காதலை இன்னும் வளமாக்கியிருப்பேன்..

* தினேஷ்மாயா *

வலித்தாலும்


வலித்தாலும்,

உன் நினைவுகளை 

என்னால் மறக்கமுடியவில்லை...

* தினேஷ்மாயா *

பத்திரமாக பார்த்துக்கொள்



பத்திரமாக பார்த்துக்கொள்..

உன் சிரிப்பை

உன் இதழ்களை

உன், என் உயிரை

என் இதயத்தை

நம் காதலை

நம்மை !!

* தினேஷ்மாயா *

எனக்கான உன்னை


வீட்டில் எனக்கான பெண்ணை தேடிக்கொண்டிருக்கின்றனர்..

மனதில், எனக்கான உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன்..

* தினேஷ்மாயா *