வாழ்க்கை வரமா! தவமா!

Saturday, February 01, 2014


   திரைப்பட நடிகர், ஜோ மல்லூரி அவர்கள் எழுதிய புத்தகம் இது. இவர் வேறுயாருமில்லை, கும்கி படத்தில் கதாநாயகியின் தந்தையாய் நடிப்பவர். இவரின் கவிதைகள் கொஞ்சம் தனியாக தெரிந்தது. அவரின் நடையும் எனக்கு பிடித்திருந்தது. இவரின் பல புத்தகங்கள் அங்கிருந்தாலும் இப்போதைக்கு இரண்டு புத்தங்கள் மட்டுமே வாங்கிவந்தேன்.

 முதலில், “வாழ்க்கை வரமா ! தவமா!” என்னும் புத்தகத்தில் இருந்து என்னை கவர்ந்த சில வரிகள் இங்கே..
  • பூக்கள் மோதி பூமி உடையாது.
    ஈக்கள் மோதி இமயம் சாயாது.
  • ஒன்றுமேயில்லை என்கிற
    வாழ்க்கைக்குத்தான
    இவ்வளவு தேடல்.
  • பயணம் இருக்கிறதோ இல்லையோ!
    பாதை அவசியம்.
  • எங்கோ ஒரு மனிதனின் அனுபவப் பதிவு
    எங்கோ ஒரு மனிதனுக்கு
    வாழ்க்கைப் பதிலாக அமைகிறது.
  • விளையாட்டில் கூட
    பந்தை உயர எழுப்பியே பழக்கப்பட்டவன் நீ;
    உன்மனதுக்கு தைரியம் சொல்ல
    இவ்வளவு வார்த்தைகள் தேவையா என்ன?

    ஒரு சொல் - ஒரே சொல்.
    நீ தாண்டமுடியாத பள்ளம் என்பது;
    ஆறடி நிலம் மட்டும் தான்.
 நல்ல ஒரு நம்பிக்கையை ஊட்டும் கவிதை தொகுப்புகள் நிறைந்த புத்தகம்.

* தினேஷ்மாயா *

0 Comments: