பண்ணையாரும் பத்மினியும்

Wednesday, February 26, 2014


   உயிரில்லா ஒரு பொருளுக்கு உயிர் தந்து, உணர்வுகளை அதைச்சுற்றி பிண்ணி ஒரு அழகான கதையோடு இந்தப்படத்தை கொடுத்திருக்கின்றனர். படம் மிகவும் அருமையாக இருக்கிறது. மறக்காமல் இந்த அழகான பதிவை நீங்களும் பாருங்கள்.

* தினேஷ்மாயா *

சேவல்

Saturday, February 15, 2014



சேவல் கூவும் சத்தம், நம் அடுத்த தலைமுறையினருக்கு கேட்காமலேயே போய்விடும் போல !!

* தினேஷ்மாயா *

பொறாமை வருமா ?


நிலவுக்கு பௌர்ணமி மட்டும்தான் வரும் 

என்று நினைத்திருந்தேன்.

இன்றுதான் தெரிந்துக்கொண்டேன், 

உன்னைப்பார்த்து நிலவுக்கு 

பொறாமையும் வரும் என்று...

* தினேஷ்மாயா *

காதலர் தின வாழ்த்துக்கள்...


ரயில் பெட்டிகளில், பேருந்து படிக்கட்டுகளில், தியேட்டர் சுவர்களில், கல்லூரி மேசைகளில், சமூக வலைத்தளங்களில் என்று காதலை எங்கெங்கெல்லாமோ வெளிப்படுத்துகின்றனர். உண்மையான காதலை உங்கள் காதலியிடமோ, அல்லது காதலனிடம் மட்டும் வெளிப்படுத்துங்கள் போதும்.. 

காதலர் தின வாழ்த்துக்கள்...

பி.கு. : நேற்று சொல்ல வேண்டிய வாழ்த்தை இன்று சொல்கிறேன் என்று கேட்காதீர்கள். காதலர் தினம் நேற்று மட்டும் அல்ல. உண்மையான காதலை கொண்டாட ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான்..

* தினேஷ்மாயா *

சீறும் அழகு

Friday, February 14, 2014


இயற்கை சீறும்போதும் அழகுதான்..

* தினேஷ்மாயா *

வாழாவெட்டி இல்லை

Wednesday, February 12, 2014


    சமீபத்தில் என் நண்பனுடன் நான் படித்த கல்லூரிக்கு சென்றேன். பேருந்தில் நடத்துனரிடம் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டு கொடுங்கள் என்றேன். வழக்கமாக அனைவரும் Anna University என்று ஆங்கிலத்தில் கேட்டுத்தான் பயணச்சீட்டு வாங்குவார்கள். நான் தமிழில் கேட்டு பயணச்சீட்டு வாங்கினேன். அதற்கு என் நண்பன் கேட்டான், என்னடா தமிழில் பேசி தமிழை வாழவைக்கிறயா ?

  அதற்கு நான் சொன்ன பதில்..

“ என் தாய் தமிழ் ஒன்றும் வாழாவெட்டி இல்லை. எவனும் தேவையில்லை என் தமிழை வாழவைக்க.”

* தினேஷ்மாயா *

வெறும் 3 கோடிதான் !!

Saturday, February 01, 2014



   இன்று செய்தித்தாளை எடுத்ததும் முதல் பக்கம் முழுக்க ஒரு பெரிய விளம்பரம் பார்த்தேன். சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே !!

   என்ன வெறும் 3 கோடி ரூபாய் “மட்டுமே” !!

  ஒரு சாதாரண குடிமகனால் வெறும் 3 கோடி ரூபாய் கொடுத்து வீடு வாங்க முடியுமா ?

  நம் இந்தியாவில் பெரும்பாலும் சாதாரண பாமர மக்களே இருக்கின்றனர், அவர்களுக்காக வீடு கட்டாமல், பணம் படைத்தவர்களுக்காக மட்டுமே வீடுகள் இங்கே கட்டப்பட்டு வருகிறது. பின்னர், இவர்களைப்போல பாமர மக்கள் வீடுகளுக்காக எதிர்காலத்தில் எங்கே செல்வர் ??

* தினேஷ்மாயா *

வன்கொடுமை


    பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் ஒரு பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட அவலநிலையை என்னவென்று சொல்வது. 

    அந்த பெண், பழங்குடியின பெண் என்பதாலும், பண பலம் இல்லாதவள் என்பதாலும் அவளை அந்த ஊரை சேர்ந்த 12 பேர் அவளுடன் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்துவிட்டனர் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதுபோன்ற கொடுமைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது நீங்களும் அவர்களை கைது செய்து கைது செய்து உங்கள் சிறைகளை நிரப்பிக்கொள்கின்றனர். 

   ஆனால், என் இந்திய பெண்களுக்கெதிரான இந்த வன்புணர்வு கொடுமைகள் இன்னமும் குறைந்தபாடில்லையே. இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை தொலைநோக்குப்பார்வையுடன் சிந்தித்து ஒரு நல்ல தீர்வு காணப்பட வேண்டும். முக்கியமாக பெண்களிடத்தில் இதைப்பற்றிய அவர்களின் கருத்தையும் மனநிலையையும் கேட்டறிய வேண்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் எந்த விதமான தண்டனையை தரவிரும்புகின்றனர், அவர்கள் இதனால் சந்திக்கும் இன்னபிற பிரச்சனைகள் என்னென்ன என்று கேட்டறிந்தும், பிற ஆய்வுகள் மேற்கொண்டும் இதற்கான தீர்வை நாம் இந்த சமூகத்திடம் முன் வைக்க வேண்டு..

* தினேஷ்மாயா *

அறுவடை நடனம்


   இணையத்தில் தமிழர்களின் நடனம் பற்றி தேடிக்கொண்டிருந்தபோது என் கண்ணில் பட்டது இந்த நடனம். தமிழர்களின் அறுவடையை எடுத்துரைக்கும் இந்த நடனம் இந்த குழந்தைகளால் அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது..

* தினேஷ்மாயா *

வினா விடை


  நேரம் இப்போது 1:30 ஆகிவிட்டது. இன்னும் தூங்கவில்லையா என்று இரவு என்னை வினவுகிறது. அதனால் என் வலைக்கு விடை தற்காலிகமாம விடைக்கொடுத்துவிட்டு, என் புத்தக பசியை நேரம் கிடைக்கும்போது மீண்டும் இங்கே வந்து தனித்துக்கொள்கிறேன். 

இனிய இரவு ...

* தினேஷ்மாயா *

எங்கும் சுஜாதா

 



   என் எழுத்தின் குரு ‘சுஜாதா’ அவர்களின் நூல்களுக்கென்றே மூன்று தனி அலமாரிகளை வைத்திருந்தார்கள்.

 * தினேஷ்மாயா *

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு


    இந்நூலை வாங்கவேண்டும் என்றுதான் சென்றேன். ஆனால், இதை படிக்க நேரம் ஒதுக்க முடியுமா என்று தோன்றவில்லை அதனால் இந்த புத்தகத்தை வாங்கவில்லை. ஆனால் விரைவில் இதை வாங்கிடுவேன். இந்த புத்தகத்தை கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன். அதில் என் மனதில் பதிந்த ஒரு சில வரிகள் எனக்காகவே எழுதப்பட்டதுபோல உணர்ந்தேன். அதை இங்கே பதிகிறேன்..

  ஒரு பொருள் உன்னிடம் இருக்கிறதென்றால், அது உனக்காக கொடுக்கப்பட்டதல்ல. அதை வைத்திருக்க வேறெவரும் இல்லையாதலால் அது உன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரியான ஆள் வரும்போது அது உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

 இதை அவர் இப்படி சொல்லவில்லை எனினும் இந்த பொருளில்தான் சொல்லியிருந்தார். இந்த வரிகளே போது நான் அந்த புத்தகத்தை வாங்க... விரைவில் வாங்கி படித்துவிட்டு பதிகிறேன் என் முழு அனுபவத்தையும்...


* தினேஷ்மாயா *

அன்புள்ள கிறுக்கி


ஜோ மல்லூரி அவர்கள் எழுதிய புத்தகம். அவர் எழுத்தில் நான் வாங்கிய இரண்டாவது புத்தகம்.

 இந்த புத்தகத்தில் இருந்து என்னை கவர்ந்த வரிகள் சில..

  • காதல் - பேச முடியாமல் ஏங்கும்!
    காமம் - பேசி முடிந்தாலும் ஏங்கும்!
  • அவள் பிறந்தபிறகு
    உலகில் அழகு தீர்ந்துப்போனது என்ற
    எனது கனவுகளில்
    யாரும் கல்லெறிந்து விடாதீர்கள்
  • பிரம்ம வரம்பை மீறிய பிரம்மாண்டமே!
  • முன்பெல்லாம்
    காலையில்
    இயங்குவதற்காகப்
    படிப்பேன்.

    மாலையில்
    மயங்குவதற்காகக்
    குடிப்பேன்.

    இப்போது
    இரண்டையும்
    விட்டுவிட்டேன்.

    அதுதான் - நீ இருக்கிறாயே !
  • அடடா,
    ஐந்தடி உயரத்தில் பூகம்பம்!
  • அன்று -
    கல்லூரி வாழ்க்கையின்
    கடைசி நாள் !
    உனது ஆட்டோஃகிராபில்
    நான் எழுதிய வரிகள் !

    ‘ நீ முந்திப்போனால்
    என் காதருகே வந்து
    சொல்லி விட்டுப் போ !

    நான் முந்திப் போனால்
    என் கல்லறைக்கு ஒருமுறை
    வந்து விட்டுப் போ!’
  • நீ காதலியாக இருந்தால்
    இடைவெளி தேவையில்லை

    நீ தோழியாக இருந்தால்
    இடைவெளி பிரச்சனையில்லை.

  • என்னைக் காதலித்துக்
    கொண்டேயிரு!
    எனக்கு
    மரணம் கூடத் தெரியாது!
காதல் கவிதைகளின் தொகுப்பு. பல இடங்களில் வார்த்தைகளால் விளையாடினாலும், சில இடங்களில் மனதில் வார்த்தைகள் ஏதுமின்றியே கவிதையின் உணர்வை என்னுள் புகுத்திவிடுகிறார்..

* தினேஷ்மாயா *

வாழ்க்கை வரமா! தவமா!


   திரைப்பட நடிகர், ஜோ மல்லூரி அவர்கள் எழுதிய புத்தகம் இது. இவர் வேறுயாருமில்லை, கும்கி படத்தில் கதாநாயகியின் தந்தையாய் நடிப்பவர். இவரின் கவிதைகள் கொஞ்சம் தனியாக தெரிந்தது. அவரின் நடையும் எனக்கு பிடித்திருந்தது. இவரின் பல புத்தகங்கள் அங்கிருந்தாலும் இப்போதைக்கு இரண்டு புத்தங்கள் மட்டுமே வாங்கிவந்தேன்.

 முதலில், “வாழ்க்கை வரமா ! தவமா!” என்னும் புத்தகத்தில் இருந்து என்னை கவர்ந்த சில வரிகள் இங்கே..
  • பூக்கள் மோதி பூமி உடையாது.
    ஈக்கள் மோதி இமயம் சாயாது.
  • ஒன்றுமேயில்லை என்கிற
    வாழ்க்கைக்குத்தான
    இவ்வளவு தேடல்.
  • பயணம் இருக்கிறதோ இல்லையோ!
    பாதை அவசியம்.
  • எங்கோ ஒரு மனிதனின் அனுபவப் பதிவு
    எங்கோ ஒரு மனிதனுக்கு
    வாழ்க்கைப் பதிலாக அமைகிறது.
  • விளையாட்டில் கூட
    பந்தை உயர எழுப்பியே பழக்கப்பட்டவன் நீ;
    உன்மனதுக்கு தைரியம் சொல்ல
    இவ்வளவு வார்த்தைகள் தேவையா என்ன?

    ஒரு சொல் - ஒரே சொல்.
    நீ தாண்டமுடியாத பள்ளம் என்பது;
    ஆறடி நிலம் மட்டும் தான்.
 நல்ல ஒரு நம்பிக்கையை ஊட்டும் கவிதை தொகுப்புகள் நிறைந்த புத்தகம்.

* தினேஷ்மாயா *

ஆகஸ்ட் 26




      நான் திண்டுக்கல்லில் இருந்தபோது வைகறை பதிப்பகத்தில் “ஆகஸ்ட் 26” என்னும் புத்தகத்தை வாங்கினேன். அந்த தலைப்பு அன்னை தெரசாவின் பிறந்ததினத்தை குறிக்கும். என் அக்காவிற்கும் அதே நாள் பிறந்தநாள் என்பதால் இந்த புத்தகத்தையும் நான் படிக்கு முன்னமே அக்காவிற்கு அன்பளிப்பாய் கொடுத்துவிட்டேன். அந்த புத்தகத்தையும் புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.

  தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய இந்நூலில் இருந்தி சில கவிதைகள்..

  •  கோவிலில் இந்து
    தேவாலயத்தில் கிறித்தவர்
    மசூதியில் இஸ்லாமியர்
    எங்கே மனிதர்?
  • லெட்சுமி என்றால்
    பணம் தானே!

    பணக்காரர்களின்
    படுக்கையறைகளில் மட்டும்
    அதிகம் புரளும்
    விலைமகளுக்கும் இவளுக்கும்
    என்ன வித்தியாசம்...
  • மனிதநேயத்திற்காக
    உலக அரங்குகளில்
    இந்தியாவிற்கு பற்பல விருதுகள்!

    மனதில் கொள்ளுங்கள்...
    இன்னும் இந்தியாவில்
    மனிதர்கள் மலம் அள்ளுகின்றனர்!
  • “இங்கே செருப்புகள்
    பாதுகாக்கப்படும்”

    செருப்புக்குக்கூட
    பாதுகாப்பு இல்லாத
    “சுதந்திர இந்தியா”!
  • பேச்சுப் போட்டிகளுக்காக
    மட்டுமே பயன்படும்
    பாரதி...

    மதிப்பெண்களுக்காக
    மட்டுமே பயன்படும்
    வள்ளுவன்...

    ஆகஸ்ட் 15-இல்
    மட்டுமே பயன்படும்
    தேசிய கீதம்...

    இதை நினைத்து
    அழ மட்டுமே பயன்படும்
    எழுத்தாளியின் பேனா !
  • சந்தோஷத்தை
    சம்பாதிப்பதென்பது
    மிகக் கடினம்...

    ஏனெனில்
    பிறருக்காக அதை
    நீ
    செலவழித்தால் மட்டுமே
    அது உன்னை
    வந்து சேரும்!


  முற்போக்கான சிந்தனையையும் அன்பின் தேவையையும் அருமையாக கவிதையாய் வடித்திருக்கிறார் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

* தினேஷ்மாயா *

மழைப் பேச்சு


அறிவுமதி அவர்களின் “மழைப் பேச்சு” புத்தகத்தை நான் சென்றவருடமே வாங்கியிருக்கிறேன். ஆனால் அதை படிக்க ஆரம்பிக்கும் முன்னமே நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாய் கொடுக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தை இங்கே கண்காட்சியில் வாங்கினேன்.

அந்த புத்தகத்தில் இருந்து என்னை கவர்ந்த சில கவிதைகள்..


  • முடிந்துவிட்டது
    வா தொடங்கலாம்
  •  இந்த நூல்..
    ஆண் தாய்
    அப்துல் ரகுமானுக்கு... ( சமர்ப்பணம்)
  • மனசை அவிழுங்கள் முதலில்
  • குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம்
    வியர்க்க
  • எத்தனை எத்தனை வேலைகள் இருப்பதாக
    எப்படி எப்படியெல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள்
  • குழந்தைகளாக இருங்கள்
    கேட்டு வாங்கிச் சாப்பிடுவதில்
  • உச்சத்தில்
    மீசை முளைத்துப் பார்த்தாய் நீ
    பெண்ணாகிப் போயிருந்தேன் நான்
  • நெற்றி முடியைச்
    சரிசெய்வதாகத்தான் தொடங்குகிறது
    பெரும்பாலும் அது
  • நான் உடுத்திய தனிமையை
    அவிழ்த்துப் போட்டவள் நீ
  • எப்படி நிகழ்ந்தது   காரணம் கேட்காதே
    நிகழ்ந்தது
  • இரண்டாவது சுற்றுக்கான
    இடைவெளியை
    அழகு செய்வதில் இருக்கிறது
    ஆண் பெண் உறவு
  • இரவு முடிந்த விடியலில்
    எப்படித்தான் சந்திக்கிறார்களோ மணமக்கள்
    எல்லோரையும்
  • ஏய் ஏய் காட்டுவாசி
  • அந்த நேரத்திற்கு மட்டும்
    அவசரமாய்த் தேவைப்படுகின்றன
    சில கெட்ட வார்த்தைகள்
  • சொல்ல முடியாத பாராட்டுதல்கள்
    முத்தங்களாகின்றன
  • என்னடா கொடுமையிது
    கசக்கிய தாளில்தான் எழுத வேண்டியிருக்கிறது
    இந்த கவிதையை மட்டும் !

காமத்தை இவ்வளவு அழகாகவும் சொல்லமுடியுமா என்றால் அது அண்ணன் அறிவுமதி அவர்களால் மட்டுமே சொல்ல முடியும்..

* தினேஷ்மாயா *

சென்னை புத்தக கண்காட்சி - என் விஜயம்



      இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்க நினைத்த அனைத்து புத்தகங்களையும் கண்டேன். ஆனால் எதையும் வாங்கவில்லை. அத்துனை புத்தகங்களையும் வாங்கிவிட்டால், உடனே அதை படிக்க ஆரம்பித்துவிடுவேன், என் தேர்வுக்கு படிக்க மாட்டேன். அதனால் அந்த புத்தகங்களின் விவரம் அடங்கிய விலைப்பட்டியலை மட்டும் வாங்கிக்கொண்டேன். ஆனால் எதிர்பார்க்காமல் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. 

      அந்த புத்தகங்கள் பற்றி வரும் பதிவுகளில் பகிற்கிறேன்.

* தினேஷ்மாயா *

ஒரு உண்மைய சொல்லட்டுமா



   பெரும்பாலும் நம் வார இதழ்களிலும், மாதஇதழ்களிலும் மற்றும் இன்னபிற இதழ்கள், நாளேடுகளின் வரும் பெண்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தை ஆண்கள்தான் அதிகம் படிக்கின்றனர், அதே சமயம் ஆண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை பெண்கள்தான் அதிகம் படிக்கின்றனர்...

பி.கு. : இதை எதிர்ப்பவர்களுக்கு இந்த வாதம் பொருந்தாது..

*தினேஷ்மாயா *