தாயும் யாரோ ? தந்தை யாரோ ?

Wednesday, February 06, 2019




தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

ஜனனத்தின் முன்னும்
சாவின் பின்னும்
சொந்தம் பந்தம்
யார் யாரோ?

பறவை எல்லாம் றெக்கை வந்தால்
தாயைக் கூட்டில் தேடாது
மனிதன்
கொண்ட பாசம் மட்டும்
வேகும்போதும் போகாது

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

மனிதன் யாரப்பா ?
சிந்திக்கும் மிருகம்
இரை தந்தால் பழகும்
பசி வந்தால்
விலகும்

பாசம் பந்தங்கள்
கற்பித்த உலகம்
இதயங்கள் கருகும்
என்றாலும் உருகும்..

சொந்தம் என்கின்ற
சுமையே கூடாது
பட்டாம் பூச்சிக்கு
பாரம் ஆகாது

அவமானம் தாங்கும்
வாழ்க்கை வந்தால்
அன்பு தொல்லையே

கடலில் பிறந்தாலும்
முகில் எங்கோ அலையும்
மழை எங்கோ பொழியும்
அதுபோல்தான் உறவும்

தாய்க்குப் பிறந்தாலும்
தாய் வேறு உலகம்
மகன் வேறு உலகம்
இதில் என்ன பாசம்?

வீசும் காற்றுக்கு
தேசம் கிடையாது
வீதிக்கு வந்த மனம்
பாசம் அறியாது

நான் என்னை மட்டும்
நம்பி நம்பிப் பயணம் போகின்றேன்...

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

ஜனனத்தின் முன்னும்
சாவின் பின்னும்
சொந்தம் பந்தம் 
யார் யாரோ?

பறவை எல்லாம் றெக்கை வந்தால்
தாயைக் கூட்டில் தேடாது
மனிதன்
கொண்ட பாசம் மட்டும்
வேகும்போதும் போகாது

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

படம்: பெரியார்
இசை: வித்யாசாகர்
வரிகள்: வைரமுத்து
குரல்: கே.ஜே.ஏசுதாஸ்

பாடலை தனியாக கேட்கும்போது ஒரு உணர்வை தருகிறது. படத்தில் பார்க்கும்போது துயரத்தையும் கண்ணீரையும் தருகிறது. வரிகள், இசை, குரல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த பாடல் ஏதோ செய்கிறது..

 * தினேஷ்மாயா *

0 Comments: