மாயா அருங்காட்சியகம்

Tuesday, June 04, 2013




   பல மாதங்களுக்குப் பிறகு என் அறையை அலசிப் பார்த்தேன். என் மாயா நினைவாக பல பொருட்களை என்னுடைய மாயா அருங்காட்சியகத்தில் சேமித்து வைத்திருக்கிறேன் பல வருடங்களாக.

* அவளின் கூந்தல்முடி

* அவளின் எழுதிக்கொடுத்த வாழ்த்து கவிதை

* அவள் கொடுத்த மோதிரம்

* அவள் 5th Semester Observation note

* அவள் வாங்கிக்கொடுத்த ஹீரோ பேனா

* அவளின் உடைந்த வளையல்

* அவளை உரசி சென்ற மரத்தின் இலை

* அவளும் நானும் சென்று உணவருந்திய உணவு விடுதியில் அவள் பயன்படுத்திய Tissue Paper

* அவள் உபயோகித்த நெற்றிப்பொட்டு

* அவள் வீட்டு குடும்ப அட்டையின் நகல் - அவளுக்கே தெரியாமல் சுட்டது

* அவள் எனக்கு கொடுத்த 10 ரூபாய்,50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்கள். அவள் எதேச்சையாக கொடுத்ததை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன்

* அவள் சாப்பிட்டுவிட்டு எனக்கு கொஞ்சம் கொடுத்த முந்திரி திராட்சை

* அவள் அணிந்த மோதிரம்

* அவளும் நானும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடியபோது அவள் எழுதிய/ கிறுக்கிய நோட்டு

* அவள் கைரேகை

இன்னும் ஏராளம் ஏராளம் இருக்கிறது என் மாயா அருங்காட்சியகத்தில். எல்லாவற்றையும் பட்டியலிட்டால் இடம் பத்தாது இங்கே. என்றாவது ஒரு நாள் படிக்கும்போது இவையெல்லாம் என் நினைவில் வந்துபோகும் என்றே சிலவற்றை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

- அன்புடன் -

*  தினேஷ்மாயா *

2 Comments:

sabana said...

இது நிஜமா தினேஷ்...........

தினேஷ்மாயா said...

இதில் பொய் என்ன இருக்கு அக்கா. அனைத்தும் நிஜமே..