என்ன விட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல…
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல…
என்ன விட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல…
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல…
எட்ட வந்து நின்னு
என் புத்தி எட்டி பாத்திச்சு
கத்தி தேவ இல்ல
உன் மௌனம் குத்தி சாச்சுச்சு
உறவே என் ஆசை உறவே…
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…
குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதாண்டி…
ஓஓஓஓ…
நீயில்லாம நானும்
நீலமில்லா வானம்
மண்ண வந்து முட்டும்
நூலருந்த பட்டம்
கூடருந்த நேரம்
சொல்லிப்பாத்த நீயும்
தள்ளி வந்து இப்போம்
கெஞ்சி என்ன லாபம்
அட பாரங்கல் நெஞ்சுக்குள்ள
ஈரம் கொஞ்சம் பூக்காதா?
இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம்
சாரல் எட்டி பாக்காத?
கட்டாறா வாழ்ந்திட்டேன்
என்ன தெச பாத்து வழி மாத்து
அடி உன்ன விட்ட யாருமில்லை..
உறவே என் ஆசை உறவே…
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…
குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதாண்டி…
என்ன விட்டு போவேன்னுதான்…
எல்லாம் கைய மீறி போச்சே…
எட்ட வந்து நின்னு
என் புத்தி எட்டி பாத்திச்சு
கத்தி தேவ இல்ல
உன் மௌனம் குத்தி சாச்சுச்சு
உறவே என் ஆசை உறவே !!
உறவே என் ஆசை உறவே !!
நான் கட்டாறா வாழ்ந்திட்டேன் !!
என்ன தெச பாத்து வழி மாத்து !!
அடி உன்ன விட்ட யாருமில்லை !!!!!
படம்: லப்பர் பந்து
இசை: ஷான் ரோல்டன்
குரல்: ஷான் ரோல்டன்
வரிகள்: மோகன் ராஜன்
இப்போ நானிருக்கும் மனநிலைக்கு, என் துணைவியை நினைச்சு, அவளுக்கு இந்த பாடலை நான் சமர்ப்பிக்கிறேன்..
கணத்துடன், கண்ணீருடன் !
* தினேஷ்மாயா *