தொலைத்துவிட்டாயா ?

Friday, April 29, 2016


உன் வாழ்க்கையில் எதையாவது தொலைத்துவிட்டாயா ??
வருந்தாதே..
அது நீ உழைத்து சம்பாதித்த பொருளென்றால், நீ மீண்டும் அதை உன் உழைப்பால் வாங்கிவிடலாம்..
அந்த பொருள் திரும்ப கிடைக்கவே கிடைக்காது என்றால், வருந்தி என்ன பயன்..
அதனால், வருந்தாதே..
* தினேஷ்மாயா *

முழுமை

பணம் தான் வாழ்க்கை என்று முதலில் உணர்ந்து,

பின்னர்...

வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதாது, பணம் ஒரு பொருட்டே இல்லை என்று உணரும் மனிதன்,

தன் வாழ்வில் முழுமை அடைகிறான்...

* தினேஷ்மாயா *

வாழ்க்கை என்பது

Friday, April 01, 2016


வாழ்க்கை என்பது பிழையின்றி வாழ்வதல்ல..

பிழையை புரிந்து திருத்திக்கொண்டு வாழ்வதே வாழ்க்கை..

* தினேஷ்மாயா *

காதல் பெரியது


எனக்கு கோபம் வந்தால்

அவள் விட்டுக்கொடுத்து போவாள்.

அவள் கோபப்பட்டால்

நான் விட்டுக்கொடுத்து போவேன்.

எங்கள் இருவருக்கும் கோபம் வந்தால்,

முதலில் விட்டுக்கொடுத்து போவது

நானாகத்தான் இருக்கும்..

ஏனென்றால், அவள்மீதான கோபத்தைவிட

எனக்கு அவள்மீதான காதல் பெரியது..

* தினேஷ்மாயா *