தேசபக்தி

Saturday, August 09, 2014



       

       அதென்னமோ தெரியல.. சுதந்திர தினம், குடியரசு தினம் வரும்போதுதான் நம்மவர்களுக்கு தேசபக்தி பொத்துக்கொண்டு வரும். எங்கு பார்த்தாலும், இந்திய தாயே என்பார்கள், தேசியக் கொடியை கண்டமேனிக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த தேசபக்தி மற்ற நாட்களில் எங்கு போய் மறைந்துக்கொள்கிறது ?


சாலையில் நடப்பவன் முதல் சாட்டிலைட் விடுபவன் வரை, சாக்கடை அள்ளுபவன் முதல் நாட்டை ஆள்பவன் வரை , இருக்கும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி மனிதாபிமானத்துடன் சக குடிமகனுக்கு உதவிசெய்து, ஒரு நல்ல குடிமகனாக வாழ்வதுதான் உண்மையான தேசபக்தி. இந்த தேசபக்தியை வருடத்தின் ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டிருங்கள். இந்த இரண்டு நாட்களில் மட்டும் தேசத்தை புகழ்வதெல்லாம் தேசபக்தியாகிவிடாது.

* தினேஷ்மாயா *

0 Comments: