
அன்றொருநாள் மழையில்
ஒற்றைக்குடையில்
நாமிருவரும் சென்றோம்....
குடையில் இடமில்லாமல்
நான் மழையில்
நனைந்துக்கொண்டிருப்பதை
நீ அறிந்து....
எனக்கு மழையில்
நனைவதுதான்
ரொம்ப பிடிக்கும்
என்று குடையை
வீசி எறிந்தாயே...
அப்போதுதான் உணர்ந்தேன்..
என்னைவிட நீதான்
அதிகமாய் காதலிக்கிறாய்
என்று...

காதலுடன் -



தினேஷ்மாயா


0 Comments:
Post a Comment