மதம் மனிதனை மிருகமாக்கும்

Thursday, September 23, 2021

 இலங்கையில் புத்தரின் பல், புத்தரின் எலும்பு என்று அவர் நினைவாக பல பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். அந்த பொருட்கள் உண்மையாகவே புத்தருடையதுதானா என்கிற விவாதம் இருக்கட்டும். 

ஆனால், புத்தரின் நினைவாக என்னவெல்லாமோ வைத்துக்கொண்டு, அவர் போதித்த அன்பையும் மனிதநேயத்தையும் மறந்து தன் மக்களையே வஞ்சிக்கும் கொடிய தேசமாய் இலங்கை விளங்குவது வேதனையே..

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இலங்கையில் சுமார் 70% மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். ஒரு புத்த நாடாக இருக்கும் இலங்கையில் ஏன் இத்தனை போர், கலவரம், அமைதியின்மை என்று சிந்தித்தால், பெரியார் சொன்ன ஒரு வாசகமே மனதில் தோன்றுகிறது.

”மதம் மனிதனை மிருகமாக்கும்”

என்னது ? புத்த மதம் கூடவா? சமண மதம் கூடவா ? என்று பலர் உங்கள் புருவத்தை உயர்த்துவது எனக்குத் தெரிகிறது. ஆம். அனைத்து மதங்களுமே மனிதனை மிருகமாக்கும்.

புத்தர் போதித்த கருத்துகளை வாழ்வியலுக்குப் பொருத்திப்பார்த்து வாழ்வதை விடுத்து, அவற்றையும் இன்னபிற கதைகளையும் தொகுத்து புத்தத்தை மதமாக உருவாக்கியதன் விளைவே இது. மதம் என்று எப்போது ஒன்று உருவெடுக்கிறதோ அங்கே மனிதநேயம் மறைந்தேப்போகிறது.

சமணமும்கூட, தீர்த்தங்கரர்கள் மக்களை நல்வழிப்படுத்த போதித்த கருத்துகளை மறந்து அந்த தீர்த்தங்கரர்களையே தெய்வமாக வழிப்படத்தொடங்கி இன்று ஒரு மதமாக வளர்ந்து நிற்கிறது. 

இதனால்தான் பெரியார் சொல்லியிருக்கிறார். மதம் மனிதனை மிருகமாக்கும் என்று. சிந்தித்துப்பார்த்தால், அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது.

* தினேஷ்மாயா *


0 Comments: