துன்பத்தில் இருக்கும்போது வராத தேவதைகள்,
மீளாத்துயிலில் சென்றப்பிறகு,
உயிரை ஏந்திச்செல்ல வருவது -
எதற்காக ?
* தினேஷ்மாயா *
துன்பத்தில் இருக்கும்போது வராத தேவதைகள்,
மீளாத்துயிலில் சென்றப்பிறகு,
உயிரை ஏந்திச்செல்ல வருவது -
எதற்காக ?
* தினேஷ்மாயா *
எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில்
மனிதனும் மனிதமும் தோற்றுப்போவதை உணரமுடிகிறது..
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வெறுமைகளால் நிரம்பியிருக்க,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மகிழ்ச்சியானத் தருணங்கள் எப்போதாவது தென்படுகின்றன..
* தினேஷ்மாயா *
ஒரு நாவலை எடுத்தால் அதை படித்து முடிக்கும்வரை உணவோ உறக்கமோ வராது. புத்தக வாசிப்பிலேயே புதியதோர் உலகிற்கு பயணித்து புதியதோர் வாழ்க்கை அனுபவத்தைப் பெறும் அந்த அதிஅற்புதமான உணர்வை..
Netflix, Amazon Prime என இணையத்தில், தூக்கம் கெட்டு தொடர்ச்சியாக படங்கள் பார்க்கும் இக்கால தலைமுறையினர் உணர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்..
* தினேஷ்மாயா *
பெரியாருக்கு முன்னர் உலகில் பல்வேறு பகுத்தறிவுவாதிகள் தோன்றி, பெரியாரைவிடவும் சிறந்த கருத்துகளை மக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் அத்துனைப்பேரும் சிந்தனைவாதிகளாகவே நினைவுக்கூறப்படும் வேளையில், பெரியார் மட்டுமே ஒரு இனத்தின் தலைவராக போற்றப்படுகிறார். அவர், வெறும் சொல்லோடு நிற்காமல் செயலிலும் தன் சித்தாந்தத்தை இறுதிவரை கடைப்பிடித்து பகுத்தறிவின் அகராதியாக திகழ்வதே அதற்கான காரணம்..
🤍
* தினேஷ்மாயா *
இலங்கையில் புத்தரின் பல், புத்தரின் எலும்பு என்று அவர் நினைவாக பல பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். அந்த பொருட்கள் உண்மையாகவே புத்தருடையதுதானா என்கிற விவாதம் இருக்கட்டும்.
ஆனால், புத்தரின் நினைவாக என்னவெல்லாமோ வைத்துக்கொண்டு, அவர் போதித்த அன்பையும் மனிதநேயத்தையும் மறந்து தன் மக்களையே வஞ்சிக்கும் கொடிய தேசமாய் இலங்கை விளங்குவது வேதனையே..
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இலங்கையில் சுமார் 70% மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். ஒரு புத்த நாடாக இருக்கும் இலங்கையில் ஏன் இத்தனை போர், கலவரம், அமைதியின்மை என்று சிந்தித்தால், பெரியார் சொன்ன ஒரு வாசகமே மனதில் தோன்றுகிறது.
”மதம் மனிதனை மிருகமாக்கும்”
என்னது ? புத்த மதம் கூடவா? சமண மதம் கூடவா ? என்று பலர் உங்கள் புருவத்தை உயர்த்துவது எனக்குத் தெரிகிறது. ஆம். அனைத்து மதங்களுமே மனிதனை மிருகமாக்கும்.
புத்தர் போதித்த கருத்துகளை வாழ்வியலுக்குப் பொருத்திப்பார்த்து வாழ்வதை விடுத்து, அவற்றையும் இன்னபிற கதைகளையும் தொகுத்து புத்தத்தை மதமாக உருவாக்கியதன் விளைவே இது. மதம் என்று எப்போது ஒன்று உருவெடுக்கிறதோ அங்கே மனிதநேயம் மறைந்தேப்போகிறது.
சமணமும்கூட, தீர்த்தங்கரர்கள் மக்களை நல்வழிப்படுத்த போதித்த கருத்துகளை மறந்து அந்த தீர்த்தங்கரர்களையே தெய்வமாக வழிப்படத்தொடங்கி இன்று ஒரு மதமாக வளர்ந்து நிற்கிறது.
இதனால்தான் பெரியார் சொல்லியிருக்கிறார். மதம் மனிதனை மிருகமாக்கும் என்று. சிந்தித்துப்பார்த்தால், அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது.
* தினேஷ்மாயா *
நான் என்னுடைய இந்த பிறவி எடுப்பதற்குக் காரணம் கர்மா (முற்பிறவியின் பாவ புண்ணியங்கள்) என்று அனைத்தையும் கர்மா மீது பழிபோடும் மதவாதிகளே.. கர்மாதான் என்னுடைய இந்த பிறவிக்குக் காரணமென்றால், உங்கள் கூற்றின்படியே, நான் எடுத்த முதல் பிறவிக்கு எந்த கர்மா காரணம் ?
அனைத்தையும் கர்மா மீது திணிப்பதை நிறுத்துங்கள். மனிதனாய் மாறுங்கள். மனிதநேயத்தோடு வாழுவோம்..
🤍
* தினேஷ்மாயா *
ஒருமுறை நாம செத்துப் போயிட்டோம்னா
நாம உயிரோட இருந்ததையே மறந்துடுவோம்...
அதனால, உயிரோட இருக்கும்போதே நல்லா நிம்மதியா சந்தோஷமா வாழ்ந்துக்கோங்க..
* தினேஷ்மாயா *
ஆமாம். நான் தெரியாம தப்புப்பண்ணிட்டேன் என்று தன் தவறை ஒப்புக்கொள்பவரை நம்பலாம்.
இல்லை, அது என் தவறில்லை, பிறரால்தான் அப்படி நடந்தது என்று தெரிந்தே பொய்யுரைக்கும் நபர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள்..
* தினேஷ்மாயா *
பாடல்: பொம்ம பொம்மதா
தைய தையனக்கு
தின்னாக்கு நக்குதின் பஜங்கரே !!
அர்த்தம்: தினமும் எனக்கு தைய தையனு பஜனை செய்றீங்களே, நான் வெறும் பொம்மை பொம்மைதான்..
- இப்படிக்கு அருள்மிகு ஆனைமுகத்தான்.. 🐘
* தினேஷ்மாயா *
சங்க காலத்தில் பெண் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால், ஆரிய பண்பாடு திராவிட நாகரிகத்தோடு கலந்த பிற்பாடு பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். பக்தி இலக்கிய காலத்தில் பெண் புலவர்களின் பங்களிப்பு வெகு குறைவு. அதற்குப்பின் பெண் புலவர்களின் எண்ணிக்கை கைவிட்டு எண்ணும் அளவிலேயே இருந்தது. கடந்த நூற்றாண்டில்தான் திராவிடத்தின் எழுச்சி மற்றும் மீட்சியால் பெண்கள் இலக்கியத்திலும் பல்வேறு துறைகளிலும் சாதிக்க துவங்கினர்.
#திராவிடம் vs ஆரியம் - ஒரு பார்வை..
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..