சுதந்திர பறவைகள்

Saturday, November 16, 2019


        நேற்று சாலையில் வருகையில், ஒரு பள்ளிக்கூட பேருந்து ஒன்று என்னை கடந்து சென்றது. அது வேறொரு ஊரிலிருந்து இங்கே சுற்றுலா வந்திருக்கும் பேருந்து. அதெப்படி எனக்கு தெரியும் என்கிறீர்களா ? அந்த பேருந்தில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் ‘ஓ’வென கத்திக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததை என்னால் காண முடிந்தது. அதை காண்கையில் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. இது ஒன்றும் ஒழுங்கீனமான செயல் இல்லை. ஆனால், பள்ளியில் இவர்கள் இப்படி இருக்கமாட்டார்கள், மாறாக இதுபோல் சுற்றுலாக்களில் இவர்கள் அதிகம் துள்ளளோடு இருப்பார்கள். இதன் முக்கிய காரணம் என்னவென்றால், பள்ளியில் இவர்களை அடைத்து வைத்து, இவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள், இதுப்போன்ற தருணங்களில் மட்டுமே இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் இப்படி செல்வதை சாலையில் செல்லும் மற்ற பயணிகள் இரசிப்பார்கள் என்று சொல்லிட முடியாது. இவர்களுடன் வரும் ஆசிரியர்களும் இவர்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. 

                     கூண்டில் அடைத்துவைக்கும் பறவைகள் திறந்துவிட்டால், வானில் சிறகடித்து சுதந்திரமாய் பறக்கத்தானே செய்யும் ! குழந்தைகளை, மாணவர்களை பள்ளிக்கூடம் என்னும் மனக்கூண்டில் அடைத்துவைத்து இரசிக்கும் இனமாக நாம் மாறிவிட்டோம் என்பதே நிதர்சனம்....

* தினேஷ்மாயா *
                   

0 Comments: