பாயும் ஒளி நீ எனக்கு

Friday, April 18, 2014


பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ எனக்குக் தும்பியடி நானுனக்கு;

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;


- மகாகவி பாரதியார்.


குக்கூ திரைப்படம் முடியும்போது இந்த கவிதையின் முதல் வரியை திரையில் போட்டார்கள். 

எங்கும் பாரதி எதிலும் பாரதி, இதிலும் ( குக்கூ திரைப்படத்திலும் ) பாரதி !!

* தினேஷ்மாயா *

0 Comments: