சமூக பொறுப்பு..

Sunday, August 28, 2011



சமூக பொறுப்பு..
     சமூக பொறுப்பு என்பது யாரும் சொல்லி வரக்கூடாது… எதை ஒருவர் நமக்கு செய்தால் அது நமக்கு பிடிக்காதோ அல்லது நமக்கு தீமையோ அதை நாம் மற்றவர்களுக்கு செய்யாமல் இருப்பதே நமது சமூக பொறுப்பை காட்டிவிடும். இருக்கும் இடத்திற்கு ஏற்ப நாம் நடந்துக் கொள்ளவேண்டும். மற்றவர்க்கு எந்த ஒரு இடைஞ்சலும் இன்றி நாம் நமது சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்…
     சில நாட்கள் முன்னர், ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரை காண சில நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அது மாலை நேரம். பனிக்காலம் என்பதால் பனி நன்றாக இறங்கியிருந்தது. மருத்துவரை காண வந்த நோயாளிகள் பெரும்பாலும் குளிர், ஜூரம், சளி என்றுதான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கே நோயாளி ஒருவருடன் வந்திருந்த உறவினர் ஒருவருக்கு போன் வந்தது. அவரும் அதை எடுத்து பேசத் தொடங்கினார். சிக்னல் சரியாக இல்லை போல. அவர், தான் இருப்பது மருத்துவமனை என்பதையும் மறந்து கத்த தொடங்கிவிட்டார். அங்கிருந்த அனைவருக்கும் இது கொஞ்சம் எரிச்சலை தந்தது. பொது இடங்களில் மற்றவருக்கு தொல்லை இல்லாதபடி பேசலாமே. நீங்கள் இப்படி பேசுவது, நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அது உங்கள் பெயரை கொஞ்சம் குறைக்கவே செய்யும்.
     இவராவது சரி. கத்தி பேசத்தான் செய்தார். இன்னும் சிலர் இருக்கின்றனர். தங்கள் ரிங்டோனை ஊருக்கே கேட்கும்படி வைத்திருப்பர். அதை கொஞ்சம் சத்தம் கம்மியாக வைத்தால் என்ன. நீங்கள் எப்போதும் பிசியாக இருக்கிறதாக மற்றவர்களுக்கு காட்டிக்கொள்ள நினைக்கிறீர்கள் போல. ஆனால் உங்கள் போன் இப்படி அதிக சத்ததுடன் ஒலிக்கும்போது மற்றவர்கள் உங்களைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை என்ன தெரியுமா ?
“ வெட்டிப்பயன் சார்.. இவனுங்க எப்பவுமே இப்படித்தான்… ”
தேவையா இந்த அவப்பெயர்.
     இன்னும் சிலர் பேருந்துகளில் செல்லும்போது சினிமா பாடல்களை அதிக சத்ததுடன் ஒலிக்கவிட்டு பேருந்துக்கே பணம் வாங்காமல் சவுண்ட் சர்வீஸ் செய்வார்கள். பாடல் கேட்பது உங்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கலாம். அதற்காக மற்றவரையும் கேட்க வற்புறுத்துவது என்ன நியாயம். உங்களை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதை செய்கிறீர்களா இல்லை வேறு எதற்காச்சும் செய்கிறீர்களா என்று புரியவில்லை. நீங்கள் எதை செய்தாலும் சரி, மற்றவர்களுக்கு தொல்லை தராமல் செய்தால் உங்களுக்கும் நன்றாக இருக்கும், மற்றவர்களுக்கும் நன்றாக இருக்கும்.. கொஞ்சம் யோசிச்சு சமூக பொறுப்போடு செயல்படுங்கள் நண்பர்களே…

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

பெற்றுவிட்டோமா சுதந்திரம் ..

Sunday, August 14, 2011






1947 ஆகஸ்ட்15..
சுதந்திரம் வாங்கினோம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்..

2011 ஆகஸ்ட் 15

இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி ..

இந்த மக்கள் தொகையில் 40 கோடி மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டிற்கு கீழ்  இருக்கின்றனர்..

வருடத்திற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கின்றனர்..

நாட்டின் மூத்த குடிமகன் - ஜனாதிபதியே குண்டு துழைக்காத மேடையில் இருந்துதான் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்தை தெரிவிக்கிறார்..

சுதந்திரம்  முழுதும் அடைந்துவிட்டோம் என்றால் இன்னமும் ஏன் ஆயுதத்தை ஏந்தி போராடிக்கொண்டிருக்கின்றனர்.. 

நிம்மதியாக ஒரு பெண் நள்ளிரவில் தனியாக நம் இந்திய தெருக்களில் நடந்து செல்ல முடியுமா..

உனக்கு கிடைக்க வேண்டிய உரிமை உன் கண் எதிரே பறிக்கப்படுவதை பார்த்தும் அதை உன்னால் போராடி பெற முடியுமா..

பணம் படைத்தவன்தான் நம் நாட்டின்  சுதந்திரத்தை  முடிவு செய்கிறான்.. 

அரசியல் என்பது சாக்கடையாக மாறிக்கிடக்கிறது இன்று.. 

சிபாரிசு அல்லது பணம் தருபவனுக்கு மட்டுமே இங்கு வேலை கிடைக்கிறது.. உண்மையான திறமைக்கு மதிப்பில்லை.. 

அன்று வெள்ளையர்கள் கொள்ளையடித்தார்கள்.. இன்று நம் இந்தியர்களே கொள்ளையடிக்கிறார்கள்.. 

எங்கே எப்போது குண்டு வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. பின் எப்படி நிம்மதியாக மக்கள் வாழ முடியும்..

வேற்றுமையில் ஒற்றுமை என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே நாட்டையும் நாட்டு மக்களையும் பிரித்து விட்டனர்..

நான் தமிழன் , நான் பஞ்சாபி, நான் தெலுகன், நான் மலையாளி என்று  மக்களிடம்பிரிவினை இருக்கிறதே தவிர நான் இந்தியன் என்று எவனாச்சும் சொல்வதுண்டா. 

ஒவ்வொரு மாநிலத்து மாணவர்களும் ஒவ்வொரு பாடப்பிரிவை படிக்கின்றனர்.. ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் ஒவ்வொரு வகையான அறிவு  தரப்படுகிறது.. இந்தியா முழுவதும் ஒரே பாடத்தை அறிமுகப்படுத்தினால் அனைத்து மாணவர்களுக்கும் சரிசமமான அறிவு இருக்கும் அல்லவா.. எல்லோரும் ஒன்றாக பாடுபட்டால்தானே ஒன்றாக உயர முடியும்..

ஒருவன் மட்டும் உயர்ந்து மற்றவன் தாழ்ந்து .. என்ன வாழ்க்கை இது ..?

சுதந்திரதினம் என்பதை நம் மக்கள் எப்படி நினைவில் வைத்திருக்கின்றனர் தெரியுமா.. 

டிவியில் புதுப்படம் பார்ப்பது.. நடிகர் நடிகையின் பேட்டியை ரசிப்பது.. விடுமுறையை நன்றாக கழிப்பது.. 

இதுதான் இப்போதைய சுதந்திர தினம்.. 

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.. மற்றொரு முறை கோபம் வரும்போது அதை  இங்கே பதிவு செய்கிறேன்.. இப்போது நேரம் இல்லா காரணத்தால் விடை பெறுகிறேன் .. நான் என் நாட்டு மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் வரை என் சட்டையில் கொடி அணிய மாட்டேன் .. மற்றவர்களுக்கு சுதந்திரதின  வாழ்த்து சொல்ல மாட்டேன்..

ஆனாலும் என் நாட்டின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய உயிர் நீத்த அந்த தியாக செம்மல்களுக்கு இந்த புனிதமான நாளில் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன் ..

ஜெய்ஹிந்த்.. வந்தே மாதரம்..



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

திமு திமு தீம் தீம் தினம்

Friday, August 05, 2011




திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மனம்
ஒ அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேனே..
 
திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மனம்

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னைக் காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணைத் துண்டாக்கி துள்ளும்
 கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணைத் துண்டாக்கி துள்ளும்



சந்தோசமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்கக் கண்டேனே
சந்தேகமாய் என்னையே நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ! அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்...


படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா