பெற்றுவிட்டோமா சுதந்திரம் ..

Sunday, August 14, 2011






1947 ஆகஸ்ட்15..
சுதந்திரம் வாங்கினோம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்..

2011 ஆகஸ்ட் 15

இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி ..

இந்த மக்கள் தொகையில் 40 கோடி மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டிற்கு கீழ்  இருக்கின்றனர்..

வருடத்திற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கின்றனர்..

நாட்டின் மூத்த குடிமகன் - ஜனாதிபதியே குண்டு துழைக்காத மேடையில் இருந்துதான் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்தை தெரிவிக்கிறார்..

சுதந்திரம்  முழுதும் அடைந்துவிட்டோம் என்றால் இன்னமும் ஏன் ஆயுதத்தை ஏந்தி போராடிக்கொண்டிருக்கின்றனர்.. 

நிம்மதியாக ஒரு பெண் நள்ளிரவில் தனியாக நம் இந்திய தெருக்களில் நடந்து செல்ல முடியுமா..

உனக்கு கிடைக்க வேண்டிய உரிமை உன் கண் எதிரே பறிக்கப்படுவதை பார்த்தும் அதை உன்னால் போராடி பெற முடியுமா..

பணம் படைத்தவன்தான் நம் நாட்டின்  சுதந்திரத்தை  முடிவு செய்கிறான்.. 

அரசியல் என்பது சாக்கடையாக மாறிக்கிடக்கிறது இன்று.. 

சிபாரிசு அல்லது பணம் தருபவனுக்கு மட்டுமே இங்கு வேலை கிடைக்கிறது.. உண்மையான திறமைக்கு மதிப்பில்லை.. 

அன்று வெள்ளையர்கள் கொள்ளையடித்தார்கள்.. இன்று நம் இந்தியர்களே கொள்ளையடிக்கிறார்கள்.. 

எங்கே எப்போது குண்டு வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. பின் எப்படி நிம்மதியாக மக்கள் வாழ முடியும்..

வேற்றுமையில் ஒற்றுமை என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே நாட்டையும் நாட்டு மக்களையும் பிரித்து விட்டனர்..

நான் தமிழன் , நான் பஞ்சாபி, நான் தெலுகன், நான் மலையாளி என்று  மக்களிடம்பிரிவினை இருக்கிறதே தவிர நான் இந்தியன் என்று எவனாச்சும் சொல்வதுண்டா. 

ஒவ்வொரு மாநிலத்து மாணவர்களும் ஒவ்வொரு பாடப்பிரிவை படிக்கின்றனர்.. ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் ஒவ்வொரு வகையான அறிவு  தரப்படுகிறது.. இந்தியா முழுவதும் ஒரே பாடத்தை அறிமுகப்படுத்தினால் அனைத்து மாணவர்களுக்கும் சரிசமமான அறிவு இருக்கும் அல்லவா.. எல்லோரும் ஒன்றாக பாடுபட்டால்தானே ஒன்றாக உயர முடியும்..

ஒருவன் மட்டும் உயர்ந்து மற்றவன் தாழ்ந்து .. என்ன வாழ்க்கை இது ..?

சுதந்திரதினம் என்பதை நம் மக்கள் எப்படி நினைவில் வைத்திருக்கின்றனர் தெரியுமா.. 

டிவியில் புதுப்படம் பார்ப்பது.. நடிகர் நடிகையின் பேட்டியை ரசிப்பது.. விடுமுறையை நன்றாக கழிப்பது.. 

இதுதான் இப்போதைய சுதந்திர தினம்.. 

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.. மற்றொரு முறை கோபம் வரும்போது அதை  இங்கே பதிவு செய்கிறேன்.. இப்போது நேரம் இல்லா காரணத்தால் விடை பெறுகிறேன் .. நான் என் நாட்டு மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் வரை என் சட்டையில் கொடி அணிய மாட்டேன் .. மற்றவர்களுக்கு சுதந்திரதின  வாழ்த்து சொல்ல மாட்டேன்..

ஆனாலும் என் நாட்டின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய உயிர் நீத்த அந்த தியாக செம்மல்களுக்கு இந்த புனிதமான நாளில் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன் ..

ஜெய்ஹிந்த்.. வந்தே மாதரம்..



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: