அன்பு ஒன்றே..
அது தங்கையிடம்
அன்னையிடம்
காதலியிடம்
தோழியிடம்
மனைவியிடம்
மகளிடம்
வெளிப்படுத்தும் விதம் மட்டுமே
மாறுகிறது...
வெளிப்படுத்தும் தன்மைக்கேற்ப
அன்பின் ஆழமும் மாறுபடுகிறது..
* தினேஷ்மாயா *
அன்பு ஒன்றே..
அது தங்கையிடம்
அன்னையிடம்
காதலியிடம்
தோழியிடம்
மனைவியிடம்
மகளிடம்
வெளிப்படுத்தும் விதம் மட்டுமே
மாறுகிறது...
வெளிப்படுத்தும் தன்மைக்கேற்ப
அன்பின் ஆழமும் மாறுபடுகிறது..
* தினேஷ்மாயா *
மனம் !!
அற்பானமதும்
அற்புதமானதும்
இரண்டின் கலவையே !!
* தினேஷ்மாயா *
அதிக அன்பின் வெளிப்பாடால் செய்யும் செயல்கள் சில சமயம் குற்றம் என்பதையும்தாண்டி பாவமாய் முடிந்திட வாய்ப்புள்ளதா என்ன !?
* தினேஷ்மாயா *
தாய்மை வாழ்க்கென தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆராரோ
தங்க கை வலை வைர கை வலை
ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம்
எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில்
என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்க்கென தூய செந்தமிழ்
பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒரு நாள்
இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும்
இதை மறவா எந்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான்
இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட
உதவும் விழி வழியே
படம்: தெறி
இசை: GV பிரகாஷ்
குரல்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: புலமைப்பித்தன்.
இந்த பாடலை இன்றுதான் முதலில் கேட்டேன். படம் பார்த்தபோதுகூட இந்த பாடல் மனதில் இடம் பிடிக்கவில்லை.
என்னவோ தெரியவில்லை, இந்த பாடலை முதலில் கேட்டதுமே கண்கள் நீரை சொரிந்தது.. ஆனந்தக்கண்ணீர் !!!
திருநாள் இந்த ஒருநாள் - இப்போது இந்த வரிகள்தான் என்னுடைய Mobile Ringtone...
இந்த வரிகள் அனைத்து உறவுக்கும், அனைத்து தருணத்திற்கும் பொருத்தமாய் இருப்பதாக நான் உணர்கிறேன்..
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..