ஆதிராவிடன்

Thursday, August 09, 2018



தி.மு.கழகத்தின் தலையாய தலைவர் டாக்டர்.கலைஞர்.கருணாநிதி ஐயா அவர்களின் மறைவு, திராவிடத்தின் கடைசி தூண் சரிந்து விழுந்ததற்கு சமம்.

இன்றுதான் திரு.ஞானராஜசேகரன் அவர்கள் இயக்கத்தில் திரு.சத்யராஜ் அவர்கள் நடிப்பில் வெளியான “பெரியார்” திரைப்படம் பார்த்து முடித்தேன். திராவிடத்தின் விதைகளை இம்மண்ணிலும், நம் மனதிலும் விதைத்தவர். சுயமரியாதை என்பதை நம் தமிழ் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கி புரியவைத்தவர்

திராவிட கொள்கைகள் இன்று இருக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் இல்லை. வெறும் கட்சி பெயர்களில் மட்டுமே இருக்கிறதென்பதை புரிந்துக்கொண்டேன். நம் சரித்திரத்தை படிக்க நான் விரும்புகிறேன். ஆதி திராவிடனைப்பற்றி, லெமூரியாப்பற்றி, பண்டைத்தமிழ் சமூகம்பற்றி, திராவிடத்தைப்பற்றி, திராவிடம் பேசிய தலைவர்கள் பற்றி, ஆங்கிலேயன் வந்தது முதல் போனது வரையான வரலாறுப்பற்றி, அன்றைய மற்றும் இன்றைய அரசியல் கட்சிகள் பற்றி, அன்றைய மற்றூம் இன்றைய சமூக கட்டமைப்பு பற்றி, இன்றைக்கு இன்னமும் இருக்கின்ற சமூக அவலங்கள் பற்றியெல்லாம் படித்து தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். இவைகளைப்பற்றிய என் தேடலும், இதன்மூலம் கிடைக்கப்போகும் அறிவும் என்னுடனே நின்றுவிடாமல், என் சமூகத்திற்கு நிச்சயம் தாரைவார்ப்பேன். சமூகம் இன்னும் வளர, சமூகநீதி இன்னும் தழைத்தோங்க என்னால் இயன்றதை செய்யப்போகிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: