இது ஒரு காதல் கதை !

Wednesday, March 14, 2018






























* தினேஷ்பூர்ணிஷா *

பூச்சண்டை !

Monday, March 12, 2018




நீ எப்போதும் பூச்சூடிக்கொள்வதில்லை..

அதுவும் நன்மைக்கே !

இல்லாவிடில்,

பூக்களுக்குள் ஒரு போர் தொடங்கியிருக்கும்..

யார் உன் கூந்தலில் இடம் பிடிப்பதென்று !

* தினேஷ்பூர்ணிஷா *

உன் வேண்டுதல் !!




உன் வேண்டுதல் அனைத்தும்

நிறைவேற வேண்டும் – என்பது மட்டுமே

என் வேண்டுதலாய் இருக்கும்.

ஏனென்றால், உன் வேண்டுதல்

மொத்தமும் எனக்காகத்தான்

இருக்கும் என்பதை நானறிவேனடி உயிரே !

* தினேஷ்பூர்ணிஷா *

சிவ சிவ



சக்தியோடு சிவனை காண சென்றேன்..

சிவாலயத்தில் நாம் !

* தினேஷ்பூர்ணிஷா *

அன்புக்கடன்



என் வாழ்க்கையில் எவரிடத்திலும்

கடன் பெற மாட்டேன் – என்று

என் கொள்கையில் உறுதியாய் இருந்தாலும்..

என் வாழ்நாள் முழுவதும்

என்னால் திருப்பி அடைக்கமுடியாதபடி

உன் அன்பை  - நான்

கடனாக பெற்றுக்கொண்டே இருக்கிறேன் !!

* தினேஷ்பூர்ணிஷா *

உன் பெண்மை




உன் பெற்றோரோடு சேர்ந்துக்கொண்டு

உன்னிடம் செல்லமாய் நானும் சண்டையிடுகிறேன்..

அது வெறும் விளையாட்டு என்பதை

நீயும் அறிவாய் நானும் அறிவேன்..

ஆனால், ஒருபோதும் நீ

என்னை எங்கும், எவரிடத்திலும்

விட்டுக்கொடுக்காமல் இருப்பது

உன் அன்பின் வெளிப்பாடு மட்டுமன்றி

உன் பெண்மையின் சிறப்பும்கூடத்தான் !

* தினேஷ்பூர்ணிஷா *

நமக்கான வாழ்க்கை இது !



எனக்காக நானோ

உனக்காக நீயோ

வாழவில்லை !

நாம் நமக்காக

வாழ்ந்துக்கொண்டிருக்கிறோமடி..

* தினேஷ்பூர்ணிஷா *

உயிரெழுத்துக்களால் உயிர் செய்கிறேன் !



அந்திமாலைப் பொழுதில்

ஆதவன் மறையும் இவ்வேளையில்

இருவரும் தனியாய் ஒரு

ஈடுசெய்ய முடியாத செயலுக்காக

உயிராய் உருகி

ஊண் வருத்தி நம் இன்னுயிரை

எதிர்நோக்கி

ஏகாந்தமாய் காத்திருக்கையில்

ஐமுகன் அருளோடு

ஒரு அழகான தேவதையின் வருகையை - நீ

ஓடோடி என்னருகே வந்து என் காதில் சொல்வதை

ஔவியத்தோடு ஊரே பார்த்ததடி !

* தினேஷ்பூர்ணிஷா *

வானவில் நாட்கள் !



வார இறுதி நாட்கள்

வானவில்லாய் ஜொலிக்க

மீதி ஐந்து நாட்கள் மட்டும்

உன் நினைவுகளை சுமந்தபடி

கருப்பு வண்ணத்தில் !!

* தினேஷ்பூர்ணிஷா *

தேவதையின் பெயர் !!



"பர்வதவர்த்தினி "

இது தெய்வத்தின் பெயர் மட்டுமல்ல

ஒரு தேவதையின் பெயரும்கூட !

* தினேஷ்பூர்ணிஷா *

வலி !



கடித்தால்தானே வலிக்கும் !

நீயென்ன –

வலிக்கும் முன்னமே

கடிக்கிறாய் ?!

* தினேஷ்பூர்ணிஷா *