போதுமே !

Friday, February 23, 2018


இந்த சோதனைகள் போதுமே !

ஈசனே !!

* தினேஷ்மாயா *

கொடுமை


வாழ்க்கை -

துவங்கும் முன்னமே

முடிந்துவிடுவது

மிகப்பெரும் கொடுமை !

* தினேஷ்மாயா *

ஆயுதங்கள் எதற்கு?

Monday, February 19, 2018



எனை கொல்ல

ஆயுதங்கள் எதற்கடி ?

என்றும் நீங்கா - உன்

நினைவுகள் போதுமே !

* தினேஷ்பூர்ணிஷா *

கண்ணீராவி எஞ்சின்

Sunday, February 18, 2018



நாம் பயணித்த அதே இரயில்வண்டி..

நீ என்னுடன் இல்லாத காரணத்தால்,

தனலாய் எரியும் என்னுயிரில்

என் கண்ணீர்பட்டு ஆவியாகி

நீராவி எஞ்சின் இன்று

கண்ணீராவி எஞ்சினாய் மாறிகிடக்கிறது..

* தினேஷ்பூர்ணிஷா *

அப்படியா என்ன ?



* தினேஷ்பூர்ணிஷா *

உயிர் நீ



உன்னை பிரிகையில்

உயிர் பிரியும் வலியை உணர்கிறேன்..

அது சரி !

என்னுயிரே நீதானே !

* தினேஷ்பூர்ணிஷா *

என்ன நியதி இது ?



அழுவது என்னவோ கண்கள்தான்...

ஆனால் இதயம் வலிக்கிறது..

என்ன நியதியோ இது !?

* தினேஷ்பூர்ணிஷா *

துரோகி..



சொல்லும்போதெல்லாம் சரி சரி என்று

அமைதியாய் கேட்டுக்கொண்டு இருப்பான்..

ஆனால், என்னவளை பிரியும்போது மட்டும்

சொன்னதையெல்லாம் மறந்துவிட்டு

என்னையும் கேட்காமல் - அவள் முன்னே

கண்ணீரை சிந்திவிடுவான்

என் கண்கள் எனப்படும் துரோகி !

* தினேஷ்பூர்ணிஷா *

நூலகம்

Thursday, February 01, 2018



பல வருடங்களுக்குப்பிறகு

இன்று ஒரு மிகப்பெரிய இடத்தில்

மீண்டும் தலைகுனிந்தேன் !!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் -

நான்...

* தினேஷ்மாயா *

நாம் வேறோ ?



இதுநாள் வரையில்

நீ யாரோ

நான் யாரோ ..

இனி நாமிருவரும்

ஒன்றானபின்

நாம் வேறோ ??

* தினேஷ்மாயா *