மாங்கல்யம் தந்துனாநேனா !

Friday, November 10, 2017


* தினேஷ்மாயா *

அவள் வந்துவிட்டாள் !!




   என் கரம்.கொடுக்கும் பூக்களை காதலோடு பெற ஒருத்தி வந்துவிட்டாள். என் கடந்தகால வலிகளை போக்க ஒருத்தி வந்துவிட்டாள். என் இதயம் பெற்று தன் இதயம் தர ஒருத்தி வந்துவிட்டாள். என் கையோடு கைகோர்க்க ஒருத்தி வந்துவிட்டாள். என் கவிதைகள் அனைத்திற்கும் அர்த்தம் சொல்ல ஒருத்தி வந்துவிட்டாள். என் கனவுகளுக்கு சிறகுகளை பரிசளிக்க.ஒருத்தி வந்துவிட்டாள். என் வாழ்வில் ஒளியேற்ற என் தேவதை வந்துவிட்டாள் !!

* தினேஷ்மாயா *

குழந்தைகள் !


என் முன்னே நிற்கும் குழந்தை

என் கையில் இருக்கும் குழந்தையை

கொஞ்சுகிறது !!

என்னையும் நீ கொஞ்சுவது எக்காலம் ?

* தினேஷ்மாயா *

கொடுத்து வைத்தவன்



எல்லோரும் சொல்கிறார்கள்..

சிலசமயம், நீயே சொன்னதுண்டு..

நான் கொடுத்து வைத்தவன் என்று..

அதெல்லாம் எனக்கு தெரியாது -

என் இதயத்தை உன்னிடம்

நான் கொடுத்து வைத்திருக்கிறேன் !!

இதுதான் எனக்கு தெரியுமடி !!

* தினேஷ்மாயா *

சொக்கத்தங்கம்





வெள்ளிக்கொலுசு தான்..

ஆனால், அவள் பாதம் தொட்டதும்

தங்கமாய் மாறிவிட்டது !!

தங்கமே பெண்ணாய் இருப்பதால் !!

* தினேஷ்மாயா *

சங்கேத வார்த்தைகள்




அவளும் நானும் எங்களுக்குள் பேசிக்கொள்ள சில சங்கேத வார்த்தைகளை வைத்துள்ளோம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பதிகிறேன் !!

* ALM
* NF
* MH
* Cell
* C?
* CI
* MPD
* Butterflies
* Coffee Bite
* Pop Song
* Hero Pen
* Speaker
* Honeyfab
* Avocado
* Knock Out

* தினேஷ்பூர்ணிஷா *

என்னுயிர் இருக்கும்



கண்ணகி தன் சிலம்பை உடைத்து காண்பித்தாள்.

அதில் முத்து கற்கள் இருந்தது..

என்னவள் கொழுசின் மணியை உடைத்துப் பாருங்கள்..

அங்கே என்னுயிர் இருக்கும் !!

* தினேஷ்மாயா *

சத்தியம்


 நான் பெரும்பாலும், ஒருவர் என்னிடம் சத்தியம் கேட்கும்போது பலமுறை சிந்திப்பேன்.  இந்த சத்தியத்தை என்னால் காப்பாற்ற முடியுமா, ஏன் சத்தியம் கேட்கிறார், எதற்காக கேட்கிறார், சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை காப்பாற்ற முடியாவிட்டால் ஏற்படும் பாதிப்பின் தன்மை என்ன என்றெல்லாம் பலமுறை ஆராய்ந்துவிட்டுதான் சத்தியம் செய்ய முன் வருவேன். என் மனம் வேண்டாம் என்றால், சத்தியம் செய்ய மாட்டேன். செய்த சத்தியத்தின்படி நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

ஆனால், என்னவள் என்னிடம் ஒரு சத்தியம் செய்துகொடு என்பாள். நான், ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவே மாட்டேன். அவள் என்ன சத்தியம் கேட்கிறாள், பெரியதா சிறியதா, எதற்காக கேட்கிறாள் இப்படியெல்லாம் ஒன்றுமே சிந்திக்க மாட்டேன். அவள் கேட்ட அடுத்த நிமிடமே சத்தியம் செய்து கொடுத்துவிடுவேன். அவளுக்காக எப்பாடுபட்டாவது அந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன். அதற்கு எங்கள் காதல் எனக்கு உறுதுணையாக இருக்கும். அதனால்தான். அவளுக்கு நான் செய்து கொடுக்கும் சத்தியம் அனைத்தையும் நிறைவேற்ற முடிகிறது என்னாள்.

சமீபத்தில் அவளுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். அவள் கேட்காமலே நானே செய்து கொடுத்த சத்தியம் அது. இந்த நொடியில் உன் கரம் பற்றினேன். இனி ஒருபோதும் பிரிய மாட்டேன் என்று !!

* தினேஷ்மாயா *

சத்தமில்லா முத்தம்


 அவள் என்னிடம் சில சமயம் அதிகம் சண்டை போடுவாள். சத்தம் போடுவாள். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏன் தெரியுமா ?

அவள் சண்டையும் கோபமும் தீர்ந்த பிறகு, அவளின் சத்தத்தின் அளவை பொறுத்து அவளின் சத்தமில்லா முத்தம் அதிகம் எனக்கு கிடைக்கும். என்னை சமாதானப்படுத்த..

புறாவை தூதுவிட்டு சமாதானப்படுத்தியது அந்த காலம். இது முத்தத்தை தூதுவிட்டு சமாதானப்படுத்துவது இக்காலம் !

* தினேஷ்மாயா *

இன்னும் ஒரு படி

Wednesday, November 01, 2017


நாமிருவரும்

நிச்சயமாக

இன்னும் ஒரு படி

நெருங்கி வந்துவிட்டோம் !!

* தினேஷ்மாயா *

கஞ்சன்


அவள் தரும் முத்தத்தை தாராளமாக வாங்கிக்கொள்கிறேன்

ஆனால், அவளுக்கு கொடுப்பதில்லை நான்..

இதனால் என்னை கஞ்சன் என்கிறாள் !

பொறுத்திரு கண்ணே !!

வட்டியும் முதலுமாய் சேர்த்து 

சரியான தருணத்தில் திருப்பி தருகிறேனடி..

* தினேஷ்மாயா *

அவளை தண்டிக்க விரும்புகிறேன்


தப்பு செய்தவரைவிட

தப்பு செய்ய தூண்டியவர்களுக்குத்தான்

தண்டணை அதிகம் என்பார்கள்..

ஆம்.. நான் தப்பு செய்துவிட்டேன்..

அந்த தப்புக்கு அவள்தான் காரணம் !

ஆதலால் -

அவளை தண்டிக்க விரும்புகிறேன் !

அவள் என்னை முத்தத்தால் தண்டித்தது போல !!

* தினேஷ்மாயா *