நான் எங்கே இருக்கேன் தெரியுமா...

Sunday, March 06, 2011



Syndicate Bank -ல Assistant Manager -ஆ இருக்கேன்..




முதல்ல எனக்கு பிஜாபூர்ல தான் வேலை கிடைச்சது.. 


                  

அப்புறம் என்னை பாகல்கோட்ல இருக்குற இன்னொரு கிளைக்கு என்னை மாத்திட்டாங்க..

இங்க எனக்கு மொழி அப்புறம் சாப்பாடு ரொம்பவே கஷ்டமா இருக்கு.. 
இங்க யாருக்கும் தமிழ் தெரியல.. என்னால சரியா பேச முடியல.. நான் பேசினா அவங்களுக்கு புரியல.. அவங்க பேசினா எனக்கு புரியல..

இருந்தாலும் இங்க இருக்குற மக்கள் எனக்கு தரும் மரியாதை அதிகம்... எனக்கும் என் பதவிக்கும் ரொம்பவே மரியாதை தராங்க..

வேலை எல்லாம் பிடிச்சு இருக்கு.. இடமும் இப்போ ரொம்ப பிடிச்சு இருக்கு.. 
சாப்பாடுதான் இன்னும் சரியா செட் ஆகல..  இன்னும் கொஞ்ச நாளில் தனியா வீடு பார்த்துடுவேன் .. இனிமே நான்தான் சமைக்கனும்.. என்ன கொடுமை சார் இது.. :)


நான் இங்கே ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க..

நான் இதை இணையதள மையத்தில் இருந்து பதிவு செய்துக்கொண்டிருக்கிறேன் .. தவறு எதாச்சும் இருந்தா கொஞ்சம் சமாளிச்சிக்கோங்க .. வீடு பார்த்துட்டு அப்புறம் நான் இணையதள இணைப்பு வாங்கிட்டு பழையபடி பதிவு செய்கிறேன் என் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.. 

என்றும் அன்புடன் ..


தினேஷ்மாயா

0 Comments: