உங்கள் ஓட்டு

Monday, March 14, 2016

வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என்பதை கவனமாக தேர்ந்தெடுங்கள்.
அரசியல் ஆதாயத்திற்காகவும் பதவியை பிடிப்பதற்காகவுமே இங்கே கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்கின்றன. தங்களின் கொள்கைக்காகவோ மக்களின் நலனுக்காகவோ இல்லை.
நீங்கள் சிந்தித்து செயல்படும் இந்த ஒரு நொடிதான் உங்களை ஐந்து வருடம் மகிழ்ச்சியாய் வைத்திருக்கும்...

* தினேஷ்மாயா *

பந்தம்

Tuesday, March 08, 2016

பெயர் வைக்கமுடியாத
பந்தம் நம் இருவருக்கும்...
அளவிடமுடியாத அன்பு
நம் இருவருக்கும்...
நம்மை மரணம் பிரித்துவிடும் என்கிற
பயமில்லை எனக்கு..
நான் உன்னோடு கலந்துவிட்டதால் !
* தினேஷ்மாயா *

முத்தம்

Monday, March 07, 2016

முத்தம் இருவகைப்படும்..
அசைவ முத்தம்..
சைவ முத்தம்..
அதிகாலை எழுந்ததும் உன்னருகில்
உறங்கிக்கொண்டிருக்கும் எனக்கு...
நீ என் நெற்றியிலும் உதட்டிலும் பதிப்பது அசைவ முத்தம்..
பின்னர் நீ குளித்து முடித்து இரவு வரை எனக்கு தரும் முத்தம் அனைத்தும் சைவ வகையை சாரும்...
* தினேஷ்மாயா *