கொலை..

Sunday, December 12, 2010



ஒரு ரோஜாகூட

கொலை செய்யும் என்பதை,

உன்னைக்கண்ட பின்னரே உணர்ந்தேன்..

அன்புடன் 
 தினேஷ்மாயா 

நந்தலாலா...

Wednesday, December 08, 2010




நந்தலாலா


இத்திரைப்படத்தைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..

இது திரைப்படமே இல்லை.. திரையில் நமக்கெல்லாம் படம் காட்டாமல்,
பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்...

இதுப்போன்ற திரைப்படத்தை நமக்கு தந்தமைக்காக படத்திற்காக பணியாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..

இசைஞானியின் இசையும், பிண்ணனி இசையும் மனதை வருடுகிறது..

மிஷ்கின் அவர்கள் தன் கதாப்பாத்திரத்தில் மிகவும் பொருந்தியுள்ளார்..

கதையில் வரும் அனைவரும் தங்கள் பாத்திரங்களை சரிவர செய்துள்ளனர்..

நான் படத்தை இங்கே விமர்சனம் செய்யவில்லை..

படத்தில் நான் ரசித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

நந்தலாலா

இந்த படம் முழுவதையுமே ரசித்தேன் நான்..

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை எனக்கு நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.. அவர்களும் அன்பிற்காக ஏங்குவதை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார்.

தாயின் பாசத்திற்க்காக ஏங்கும் சிறுவன் அவனைப் போல் இருக்கும் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பிரதிபலித்திருக்கிறான்..

தாயைத் தேடி செல்லும் இரு பிஞ்சு உள்ளங்களின் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு விஷயமும் உயிரை அப்படியே உருவி தன்வசம் வைத்துக் கொள்கிறது..

சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண்ணிற்கு உதவி செய்ய சென்று, அந்த பெண்ணிடம் பலமுறை அடித்தும் “வலிக்குதா ?”  என்று அப்பாவியாய் கேட்பது ரொம்ப அருமை..

இளநீரை திருடிக்கொண்டு ஓடி, ஒரு தாத்தா இவர்களை துரத்திச் சென்று மயங்கி கீழே விழ, பின்னர் இவர்கள் அவருக்கு உதவி செய்யும் காட்சி அருமை...

இவர்களுக்கு வழி காட்டி உதவும் ஒரு ஊனமுற்றவரின் கொம்பு ஒரு சண்டையின் போது உடைந்துவிட, அவர் “ ஐயோ ! என் கால் போச்சே ! ” என்று கதறும்போது அரங்கமே மனதிற்குள் பதறியது.. அருமையான காட்சி..

இவர்களின் நிலையை அறிந்து இவர்கள் பயணத்தின் வரும் அனைவரும் இவர்களுக்கு உதவுவது மனிதர்கள் இன்னும் இவ்வுலகைவிட்டு செல்லவில்லை என்பதை எனக்கு எடுத்து சொல்லியது...

பாடல்கள் கதையோடு ஒன்றிவிட்டது.. ஒவ்வொரு பாட்டும் மனதை கனமாக்குகிறது.. இசைஞானியின் குரலில் வரும் இரண்டு பாடல்களும், ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே பாடல் கண்ணீரை வரவழைக்கிறது...

இது ஒரு படமாக இன்றி ஒரு பாடமாக நமக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்....


“உயிரே .. 
  உயிரே ..
  நந்தலாலா .. 
  என் உயிரை ..
  உன் கையில் எடுத்துக்கொண்டாய் ..
  இவ்வுலகை ..
  நன்றாக எடுத்துச்சொன்னாய் ..

என்றும் அன்புடன் ..


தினேஷ்மாயா

மின்னல் தாக்கியது..

Monday, December 06, 2010



மழைக்காலம்..

என்னவள் அவள் வீட்டைவிட்டு
வெளியே வந்து நின்றாள்..

நான் அவள் வீட்டை கடந்து சென்றேன்...

மறுநாள் செய்தி -


வாலிபரை மின்னல் தாக்கியது ! ! !



என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா