என் வலைப்பக்கம்..
இந்த இணைய உலகில்
பலர் தங்களுக்கென ஒரு வலைப்பக்கத்தை வைத்திருக்கிறார்கள். நான் பத்தோடு பதினொன்று என்னும்
அளவில் என் வலைப்பக்கம் இருக்க விரும்பவில்லை. அதனால் தான் என் வலைப்பக்கம் இருப்பதை
என்னை சேர்ந்த நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துகொண்டேன். மற்ற இணையதளங்களில்
என் வலைப்பக்கத்தை பதிவு செய்யவில்லை. எனக்கு இப்போது இருக்கும் வாசகர்களே போதும்.
நான் வலைப்பக்கத்தை எழுதுவது யாருக்காகவும் இல்லை. என் முதுமைக் காலத்தில் ஒரு ஈசி
சேரில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு என் பிள்ளை வாங்கிக்கொடுக்கும் ஒரு சிறிய கணிணியில்
என் இளைய காலத்து நினைவுகளை அசைப்போடத்தான் இப்போது நான் என் வலைப்பக்கத்தை எழுதுகிறேன்.
நீங்கள் கேட்பது புரிகிறது.. நான் ஏன் டைரி எழுதிக்ககூடாது என்று. எனக்கு மட்டும் ஆசை
இல்லையா என்ன. 2007-09 வரை டைரிதான் எழுதினேன். அதை மற்றவர் படிப்பது அதிகமாகிவிட்ட்து.
அதனால் என் சொந்த விஷயங்களை எழுதுவதை விட்டுவிட்டேன். என் மனதை தொட்ட விஷயங்களை மட்டும்
எழுத நினைத்தேன்.. அதான் இங்கே வலையை பிண்ணிக்கொண்டிருக்கிறேன்..
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment