மூடநம்பிக்கை
அறிவியல் மயமாகிவிட்ட இந்த உலகில் இன்னமும் மூடநம்பிக்கைகளுக்கு
பஞ்சமில்லை. ராகுகாலம் எமகண்டம் அஷ்டமி இன்னும் இப்படி பல விஷயங்கள் இருக்கின்றது.
செவ்வாய்கிழமையில் எந்த வேலையையும் ஒரு சிலர் செய்ய மாட்டார்கள். இன்னும் சிலர் ஒரு
குறிப்பிட்ட தேதிகளில் எந்தவித வேலையையும் செய்ய மாட்டார்கள். மூட நம்பிக்கைகளில் பல
விதங்கள் உண்டு. இங்கு, நேரத்தையும் காலத்தையும் மூடநம்பிக்கையில் சேர்க்கும் ஒரு சிலரைப்
பற்றிப் பார்ப்போம். மீதமுள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
நாள் சரியில்லை நேரம் சரியில்லை என்று சொல்லி
அந்த நேரத்தில் அவர்கள் எந்த வேலையையும் செய்யாமல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். சொல்லப்போனால்,
இவ்வுலகம் தான் அவர்களை அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஒதுக்கிவைத்துள்ளது. இவர்கள்தான்
எந்த வேலையையும் செய்யாமல் முடங்கிக் கிடக்கிறார்களே தவிர இவ்வுலகம் இயங்கிக் கொண்டுதான்
உள்ளது. என் அம்மா இந்த பழமொழியை அடிக்கடி சொல்வார்கள் – “ நாளும் கிழமையும் நளிந்தோர்க்கு
இல்லை.. ”
அதுவும் உண்மைதான். எல்லாம் இருக்கும் பணம் படைத்தவர்கள்தான்
எந்த ஒரு வேலைக்கும் நாளும் கிழமையும் பார்ப்பார்கள்.
ஒன்றே செய்.. ஒன்றும் நன்றே செய்.. நன்றும் இன்றே செய்..
ஒன்றே செய்.. ஒன்றும் நன்றே செய்.. நன்றும் இன்றே செய்..
இதுவும்
பழமொழிதானே.. இப்பழமொழியை எல்லோரும் பின்பற்றலாமே. இதைவிடுத்து – பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது இதுப்போன்ற பழமொழிகளை ஏன் பின்பற்ற வேண்டும்.
நேரம், காலம் என்பதெல்லாம் வெறும் மாயைதான்.
இப்போது நேரம் என்னவென்று கேட்டால் இரவு 8 மணி என்று சொல்கிறார்கள் என்று வைத்துக்
கொள்வோம். அதே சமயம் அமெரிக்காவில் இருக்கும் நம் உறவினருக்கு போன் செய்து அங்குள்ள
நேரத்தை கேட்டால் அவர் காலை 11 மணி என்பார். இது அறிவியல் பூர்வமாக உண்மைதான் ஆனால்
சற்று யோசித்துப் பார்த்தால் நேரம் காலம் எல்லாம் வெறும் மாயைதான்.
இல்லாத ஒரு நேரத்திற்கும் காலத்திற்கும் மூடநம்பிக்கை
என்னும் போர்வையைப் போட்டுவைத்து அதை ஒதுக்குவதாக நினைத்துக் கொண்டு நீங்கள் இவ்வுலகை
விட்டு ஒதுக்கப்பட்டுவிடுகின்றனர்..
இறைவன் நம்பிக்கை இருப்பவர்கள்தான் அதிகம் மூடநம்பிக்கைகளை
பின்பற்றுகின்றனர்.. கடவுள்மீது உண்மையான பக்தி உள்ளவர்கள் எந்த விஷயத்திற்கும் கலங்க
மாட்டார்கள். எல்லாத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் வேலையை பார்ப்பார்கள்.
நம் முன்னோர்கள் பின்பற்றிவந்த மூடநம்பிக்கைகளை
நம் சந்ததியினர் அறவே ஒழித்து ஒரு நல்ல சமுகத்தை உருவாக்கும்வோம். இன்னும் நம் சமூகத்தில்
பலவாறாக மூடநம்பிக்கைகள் நிலவி வருகிறது. அதைப் பற்றி பின்னர் பேசுவோம்…
நன்றி……..
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment