காதல் என்றால் என்ன

Friday, December 16, 2011




காதல் என்றால் என்ன
      உன் மனதை புரிந்துக்கொள்ள அதை பகிர்ந்துக்கொள்ள ஒரு மனதை நீ எதிர்பார்க்கிறாய். அது அவளுடைய மனதாக இருக்க வேண்டும் என்று நீ நினைக்கிறாய். ஒருவேளை அவள் மனதும் இது போன்று எதிர்பார்த்து அவள் மனதுக்கு துணையாய் வேறொரு மனது கிடைத்திருக்கலாம் இல்லையேல் தன் மனதின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளவும் அதை பகிர்ந்துக்கொள்ளவும் தன் பெற்றோரின் மனதே போதும் என்று அவள் நினைக்கும் போது அதை நீ என்ன செய்ய முடியும். அவள் மனதில் உனக்கு இடமில்லை என்றால் நீ உன் வேலையை பார்க்க செல்லலாமே அதை விடுத்து தாடி வளர்த்து கண்ணீர் சிந்தி உன் வாழ்க்கையை எதற்கு வாழ மறுக்கிறாய்.

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: